Read Time:1 Minute, 15 Second
சிறிலங்கா அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடாத்திய இனப்படுகொலையின் பல லட்சம் தரவுகள் திகதிவாரியாகத் தொகுக்கப்பட்டு நல்லூர் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்திற்கு முன்னால் உள்ள இடத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பாலச்சந்திரன், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா உட்பட பல படுகொலைகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அவற்றை பெரும்பாலான மக்கள், குறிப்பாக சிறுவர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இக் காட்சிப்படுத்தலானது தொடர்ந்து இம்மாதம் 15ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.