தாயகத்தில் உறவுகளை தேடி கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்ட பேரணி.

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.

மேலும்

வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 13ம் ஆண்டு நினைவு நாள்

தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 13ம் ஆண்டுவீரவணக்கம்

மேலும்

4ம் நாளாக (19/02/2022) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.

கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து தற்போது நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டம், இன்று 19/02/2022 Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை வந்தடைந்தது. வரும் வழியில் கடும் புயற்காற்றின் சீற்றத்திலும் இயற்கையின் பெரும் சவால்களுக்கு மத்தியில் பயணித்து 70Km தொலைவினைக்கடந்து இலக்கு நோக்கி அயராது பயணிக்கின்றது.

மேலும்

சுவிசில் 17. 02. 2022 முதல் புதிய தளர்வுகள்

கடந்த 17.02.2022 முதல் சுவிற்சர்லாந்து அரசு மகுடநுண்ணித் தொற்றினைத் தடுப்பதற்கு அறிவித்திருந்த பெரும்பாலான நடவடிக்கைகளை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டின் அதிபர் திரு. இக்னாச்சியோ காசிஸ் இவ்வாறு ஊடக சந்திப்பில் சுவிஸ் அரசின் தளர்வுகளை அறிவித்தார் «பெருந்தொற்று பெருக்கம் குறைவடைந்து வருகின்ற நற்சூழல் அமைந்துள்ளது, தொடுவானத்தில் ஒளி ஒளிர்கின்றது». 

மேலும்

மூன்றாம் நாளாக (18/02/2022) தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்.

சிரிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளினை முன்னிறுத்தி மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 3 நாளாக ஐ.நா நோக்கி 49வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு தொடர்கின்றது.

மேலும்

உழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப்.கேணல் தவம்

மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது.

மேலும்

45-வது சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல், மாலை 8 மணி வரை நடைபெறுகிறது.

மேலும்

தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி

அனைத்துலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டுஅனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால்இணையவழியில் நடாத்தப்படும்தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி

மேலும்

லெப்.கேணல் பொன்னம்மானின் 35வது ஆண்டு நினைவு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

மேலும்

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 12.02.2022 அன்று கிளாறூஸ் மாநிலத்தில் நினைவுகூரப்பட்டது.

மேலும்