லெப்.கேணல் பொன்னம்மானின் 35வது ஆண்டு நினைவு

0 0
Read Time:24 Minute, 39 Second

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

1956ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் யாழ்ப்பணம் கலட்டியில் குடும்பத்தில் மூன்றாவது ஆண்மகனாக யோகேந்திரன் குகன் என்ற பெயருடன் உதித்தார். சிறுவயதில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். கருவில் இருக்கும் பிள்ளையைக் கூட அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கொடுமைக்குள் இவரது குடும்பமும் மிஞ்சவில்லை.

1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இவரது தந்தை மிகக் கொடுமையாக சிங்கள இனவெறி பிடித்தவர்களால் தாக்கப்பட்டார். அடித்து அவரைக் குற்றுயிராய் போட்டார்கள். தமிழ் மக்கள் தொடர்ந்து சிங்களவர்களால் தாக்கப்பட்டமை பொன்னம்மானைப போராடத்தூண்டியது.

சிங்கள ஆட்சியாளர்களின் தமிழ் மாணவர்கள் மீதான தரப்படுத்தல், அடக்குமுறைகள் மாணவர்களின் கல்வியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ் மாணவர்களுக்கான முன்னுரிமைகள் எல்லாம் புறம் தள்ளி விடப்பட்டபோது. ஒவ்வொரு இளம் துடிப்பு மிக்க இளைஞர்களின் வாழ்வும் சீரழியத் தொடங்கியது.

லெப்.கேணல் பொன்னம்;மான் அவர்களின் வாழ்வும் விதிவிலக்காக அமைந்து விடவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரே வழி தமிழ்மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்காகப் போராட வே ண்டும் என்பதை தெளிவாக பொன்னம்மான் புரிந்து கொண்டார்.

கல்வியிலும் சரி விளையாட்டுக்களிலும் சரி மிகவும் துடிப்போடும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுள்ள பொன்னம்மான் அரசின் ஒடுக்குமறைக்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தார். 1978ஆம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரை சந்தித்த பொன்னம்மான் தொடர்ந்து விடுதலைப்போராட்டத்தின் ஆதரவாளராக இருந்து பின்பு முழு நேரப்போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

விடுதலைப்புலிகளிடம் ஆயுதப்பற்றாக்குறை இருந்த காலத்தில் வெடிகுண்டுகள் செய்வதில் பெரிதும் உழைத்தவர் பொன்னம்மான். பலவெடிகுண்டுகளை செய்தும், பல கண்ணிவெடிகளைத் தயாரித்தும் எதிரிகளை கலங்கடித்தார்.

தமிழீழ தேசியத்தலைவருடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார். விடுதலைப் புலிகளின் பெரும் வளர்ச்சிப் போக்கில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தாக்குதலாக அமைந்த 1983ஆம் ஆண்டு யூலை 23நாள் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவ ரக் மீதான தாக்குலில் 13சிங்களப் படைகள் கொல்லப்பட்டதிலும். காரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதல்களிலும், பரந்தன் உமையாள்புரத்தில் சிறிலங்கா இராணுவ வாகனம் மீதான கண்ணி வெடித்தாக்குதலிலும் பொன்னம்மான் பங்கு கொண்டார்.

இந்தியா விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி வழங்கிய காலப்பகுதியில் முதல் அணியின் தலைவராக 100பேருடன் இந்தியாவிற்குச் சென்று பயிற்சிகள் எடுத்தார். இதில் தொடச்சியான முறையில் நடந்த பய்றிசிகளில் இவர் போராளிகளுடன் ஒரு முன்னோடியாக இருந்து போராளிகளுக்கு அரவணைப்பை வழங்கினார், போராளிகள் பிழை செய்தால் அவர்கள் உணரும் வகையில் கண்டித்து வளர்த்தார்.

அவர்களுக்கு போராட்டம் பற்றிய சிந்தனைகளை அவர்களுக்கு ஊட்டினார். இந்தியாவிற்குச் சென்ற அணிகள் வரிசையில் 7ஆவது அணி பெண்களின் முதலாவது அணியாகும். இப்பயிற்சப்p பாசறை 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்றது இதையும் இவரே பொறுப்பேற்று வழிநடத்தினார்..

இவ்வாறு இந்தியாவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு தமிழீழம் வந்தவ போராளிகள் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான் பல தாக்குதல்களை நடாத்தினர். பொன்னம்மான் அவர்கள் ஒட்டுவேலைகள் பயின்று வெடிகுண்டுகளுக்கு ஏற்றவாறு வாகனங்களில் வெடிகுண்டுகளைப் பொருத்தி இராணுவ முகாம்மீதான பல தாக்குதல்களுக்கு வழிவகுத்தார்.

இதேபோன்று தான் 1987.பெப்ரவரி 14நாள் தண்ணீர் இழுக்கும் வாகனம் (தண்ணீர் பவுசர்) போன்ற வடிவில் வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்தார். தண்ணீரும், வெடிமருந்துகளும் மேலும் கீழுமாக வைத்து நுட்பாக அதனை உருவாக்கினார். சிறு துவாரத்தினூடே கசியத்தொடங்கியதும், அதனை சீர்செய்யும் போருட்டு ஒட்டு வேலைகளில் பொன்னம்மானும் அவருடன் கூட சில போராளிகளும் இருந்தார்கள்.

அப்போது அங்கு பெரும் வெடி ஓசை கேட்டது. லெப். கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை கவர், 2ஆம் லெப். பரன், வீரவேங்கை தேவன், லெப். சித்தார்த்தன், வீரவேங்கை அக்பர் இவர்களுடன் நாட்டுப்பற்றாளர் ரஞ்சன் ஆகியோர் அங்கு நடந்த தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவெய்தினர்.

கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை

1985 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை இயக்குகிறான்.அந்த நேரம் பார்த்து ஒரு போராளி ஏலேலோ அய்லசா என்று பாடவும் விமானத்தை தள்ளிய மற்றறைய போராளிகள் தள்ளுவதை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். வாசு அவர்களை பார்த்து கோபமாய் கத்துகிறான் மேலை எழும்பினா காணும் நான் எப்பிடியாவது கோட்டைக்குள்ளை கொண்டு போய் இரண்டு ஆமிகாரன்ரை தலையிலையாவது விழுத்துவமெண்டா இவங்களோடைஒண்டும் செய்ய ஏலாது பகிடியை விட்டிட்டு தள்ளுங்கோடா என்கிறான்.

போராளிகள் தொடர்ந்து விமானத்தை தள்ள விமானம் சில அடிகள் மேலே எழுவதும் கீழே விழுவதுமாய் கடைசியில் அந்த வீதியோரத்தில் நின்ற ஒரு பூவரசு மரத்துடன் மோதி ஒரு பக்க இறக்கை உடைந்து போக வாசு சில சிராய்ப்பு காயங்களுடன் விமானத்தை விட்டு இறங்குகிறான். ஆனாலும் விமானம் செய்கின்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

வாசு எப்பவுமே தன்னைபற்றியோ தன்னுயுரிரைபற்றியோ கவலைபடாமல் எப்படியாவது எங்கேயாவது எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவதை பற்றியே சிந்திப்பவன். அது மட்டுமல்ல கண்ணிவெடிகள் தயாரிப்பது ரவைகட்டுவது(ஆரம்பகாலத்தில் 9 மி.மீ.துப்பாக்கி ரவைகூடுகளை சேகரித்து திரும்ப அவைகளை ரவைகளாக தாயாரிப்பார்கள்) அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பழுதடைந்த ஆயுதங்கள் அனைத்தையும் திருத்துபவனாகவும் இருந்தான். ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களிற்கு இந்தியா அன்று ஆயுதங்கள் வழங்கிய போது புலிகள் இயக்கத்திற்கும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கியது ஆனால் அவை பெரும்பாலும் ஏன் 80 வீதம் பாவிக்க முடியாத ஆயுதங்களையே கொடுத்திருந்தது.

அவற்றையெல்லாம் வாசு இரவு பகலாக இருந்து முடிந்தவரை திருத்தி போராளிகளிடம் கொடுப்பான். அந்த ஆயுதங்கள் யுத்த களத்தில் சில நெரங்களில் இயங்க மறுக்கும்.யுத்தகளத்தில் ஒரு போராளியின் ஆயுதம் இயங்கா விட்டால் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைவரிற்கும் தெரியும். அந்த போராளிகள் வாசுவை திட்டியபடியே அந்த ஆயுதங்களை அவனிடம் கொண்டு போய் கொடுப்பார்கள்.அவன் சிரித்தபடியே என்ன மச்சான் செய்யிறது இந்தியா ஆயுதத்தை தந்த நேரம் அதை இரும்பா தந்திருந்தா நான் அதை உருக்கி ஒரு நல்ல ஆயுதமா செய்து தந்திருப்பன்.ஆனால் என்ன செய்ய அவங்கள் இப்பிடி தந்திட்டாங்கள் நானும் முடிஞ்சவரை திருத்திறன் எனறவாறே மீண்டும் அவற்றை திருத்த தொடங்கிவிடுவான்.அப்போது 1987ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ் நாவற்குழி இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டனர்.

அந்த இராணுவ முகாமிற்கு தண்ணீர் வெளியில் இருந்து ஒரு பெளசர் முலமே எடுத்து செல்லபடுவது வழைமை எனவே அதே போல ஒரு பெளசரை தயாரித்து அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி அதனை முகாம் உள்ளே அனுப்பி வெடிக்க வைப்பது பின்னர் அது வெடித்ததும் அதிர்ச்சியில் இருக்கும் இராணுவத்தினரை தாக்குவது என்று திட்டம் தீட்டப்பட்டு.அதற்கான அந்த முகாம் மீதான வேவுபார்த்தல் மற்றும் இராணுவ நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அன்றைய சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்சிடமும். வெடிமருந்து நிரப்பிய பெளசரை தயாரிக்கும் பொறுப்பு வாசுவிடமும் ஒப்படைக்க பட்டது. அதுவும் எதிரிக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடாதபடி தண்ணீர் கொண்டு போகின்ற அதேபோன்றதொரு அச்சுஅசலாக இன்னொரு பெளசரை தயாரிக்க வேண்டும்.சிரமமானதும் சவாலானதமான ஒரு பணி ஆனால் வாசு ரஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரின் உதவியோடு ஆர்வத்துடன் செயற்பட்டான். அசல் தண்ணி பெளசரில் எங்கெங்கு கறள் பிடித்திருக்கின்றது.

எங்கெங்கு நெளிந்திருன்றது என்று பார்த்து பார்த்து நகலை அசல் போல ஒரு மாதங்களிற்கு மேலாக செய்து முடித்தான்.அது மட்டுமல்ல தண்ணீர் பெளசர் இராணுவ முகாமிற்கு உள்ளே போகும் போது இராணுவத்தினர் பெளசரின் உள்ளெ தண்ணீர் தானா உள்ளது என்று பரிசோதித்து தான்அனுப்புவார்கள்.அதனால் அந்த பெளசரின் மேல் பாதியில் தண்ணீரும் கீழ் பாதியில் வெடிமருந்தும் நிரப்பி தயாரிக்கப்பட்டது.தாக்குதலுககான நாளாக 14.02.87 அன்று மாலை தீர்மானிக்கபட்டது.அந்த தாக்குதலிற்கு பொறுப்பாக அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு பொறுப்பேற்றிருந்தார்.அவர் போராளிகளிற்கு அன்று காலை தாக்குதல் பற்றிய விழக்கங்களை அளித்து மாலை 6.30 மணியளவில் முகாமின் உள்ளே அந்த பெளசர் வெடிக்கும் அதை தொடர்ந்து தொலைதொடர்பின் ஊடாககட்டளை வந்ததும் முகாம் மீதான தாக்குதலை தொடங்கும்படி வழியனுப்பி வைத்தார்.

அதன்படி போராளிகள் எல்லோரும் அன்று மாலை 4 மணியளவிலேயே தயாராய் நாவற்குழி முகாம் தாக்குதலிற்காக அவரவர் இடங்களில் நிலையெடுத்து காத்திருந்தனர்.இறுதியாக அந்த பெளசரை வெடிக்க வைப்பதற்காக நேர கணிப்பு பொறியை லெப். கேணல் பொன்னம்மானும் வாசுவும் இணைத்து முடித்திருந்தனர். எல்லா போராளிகளும் தங்களிற்கு தந்தவிடயங்களையும் எதிரியை எப்படியெல்லாம் தாக்கலாம் என்று தங்கள் மனங்களிலேயே ஒத்திகை பார்த்தபடி அந்த வெடி வெடிக்க போகும் 6.30 மணி எப்போவரும் என தங்கள் கை கடிகாரங்களை அடிக்கடி ஒரு பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த வேளை 5.30 மணியவில் அந் பகுதியையே அதிர வைக்கும் ஒரு வெடியொசை கேட்டது. எல்லா போராளிகளின் முகங்களிலும் ஒரு வித கேள்வி குறி யுடன் தொலை தொடர்பு கருவி வைத்திரந்தவர்களை பார்த்தனர்.

தொலை தொடர்பில் எல்லோரும் கிட்டுவை அழைத்தபடி இருந்தனர்.அண்ணை என்ன நடந்தது. அங்கை வாசு பென்னம்மான் ஒரதரின்ரை தொடர்பும் கிடைக்கேல்லை என்ன நடந்ததெண்டு தெரியேல்லை எல்லாரும் அப்பியே நில்லுங்கோ நான் இடத்திற்கு போய் பாத்திட்டு உங்களை தொடர்பு கொள்ளுறன்கிட்டுவின் குரல் ஒலித்தது. அரை மணி நெரத்தின் பின்னர் அனைவரையும் தங்கள் முகாம்களிற்கு திரும்பும்படி கிட்டுவின் கட்டளை கிடைத்தது. ஆம் 5.30 மணிக்கே அந்த பெளசர் வெடித்து சிதறிவிட்டது. எப்படி எங்கே தவறு நடந்தது என்று யாருக்கும் தெரியாது காரணம் அதனருகில் நின்றிருந்த பொன்னம்மான் கேடில்ஸ் ரஞ்சன் அகியோருடன் வாசுவும் கந்தக காற்றுடன் கலந்து எங்கள் தேசத்தில் வீசும் காற்றாகி போனான். வாசு மட்டுமல்ல அவனது குடும்பத்தில் அவனது சகோதரன் மேஜர் ஜேம்ஸ். சகோதரி கப்ரன் சுந்தரி ஆகியோரும் எங்கள் மண்ணிற்காய் மாவீரர்களாகி போனார்கள். அவர்களிற்காய் எனது தலை தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொண்டு நினைவுகளை தொடர்வேன்…

மேஜர் கேடில்ஸ்

போராட்டத்தின் நிழலில்

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கண்டாவளையிவ் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா இராணுவத்தின் கொடூரத்தனங்கள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பிராந்தியத்தில் மாத்திரமன்றி சிங்கள இராணுவம் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார்.

அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று உழைத்தார்.

தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப்பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது.

தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பிரதேசத்தில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு ஆகியோரோடு இணைந்து இராணுவத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பவுசரைப் பயன்படுத்தி இராணுவத்தைத் தகர்ப்பதில் முன்னின்று ஈடுபட்டார். அதன் போது ஏற்பட்ட விபத்தில் லெப். கேணல் பொன்னம்மானோடு, கப்டன் வாசு, லெப். சித்தார்த்தன் உட்பட ஏழு போராளிகளோடு காற்றோடு காற்றாகிப் போனார்.

தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஏழு மாவீரர்களினதும் 14ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.

நன்றி எரிமலை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment