சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவெழுச்சிநாள்!

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 12.02.2022 அன்று மாலை 18:30 மணியளவில் அவர் ஈகைச்சாவினைத் தழுவிய ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நினைவுகூரப்பட்டது.

மேலும்

ஈகைப்பேரொளி முருகதாசனின் இறுதி சாசனம்

உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள் என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்.

மேலும்

பெரும் ஊடகச் சமராடிய நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி நினைவு சுமந்து

ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை வானொலி’ ஊடாக உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பிரிவு எமையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும்

மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் – தூதரக அதிகாரி தெரிவிப்பு ஊடக அறிக்கை

வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்றய தினம் 09-02-2022 புதன்கிழமை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய நான் முன்மொழிந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில் எமது தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும்

லெப். கேணல் நீலன்
வெற்றிகளின் பின்னால்….

“உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் கூருவதினூடாக இவனை வெளிக்காட்ட முயசிக்கிறோம்.

மேலும்

நான்காவது தடவையாக ஐரோப்பா ரீதியாக நடாத்தப்படும். கரோக்கே தமழீழ எழுச்சிப் பாடற்போட்டி

வணக்கம் , சூரிச் மாநிலத்தில் நான்காவது தடவையாக ஐரோப்பா ரீதியாக நடாத்தப்படும்..கரோக்கே தமழீழ எழுச்சிப் பாடற்போட்டி கானக்குயில் 2022! 26.02.2022; சனி முற்பகல் 10:00 மணி முதல்.. Schwerzi saal, In der Schwerzi 4, 8135 Langnau am Albis ZH

மேலும்

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளாய்வு செய்வதற்கான கோரிக்கை

அதி வணக்கத்திற்குரியவரே,73 ஆவது குடியரசு தினத்திற்கு எமது இதயபூர்வ வாழ்த்துக்கள்!பிரான்ஸ் நாட்டினைத் தளமாக கொண்டு செயற்பட்டு வரும் எமது அசோசியேசன்இன்ரநாசனல் டிஸ் ட் ர் ய்ட்ஸ் டீ ஹோம்மி (Association International Des droite deHomme, AIDH) அமைப்பானது ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தினரின்மனிதவுரிமைகள் சா ர் ந்த செயற்பாடுகளைப் பிரதிநித்துவம் செய்துவருகிறது.

மேலும்

பிரான்சில் பொண்டி நகரில் நடந்த மாநகரசபைத் தேர்தலும் தமிழ் மக்களின் ஆதிக்கமும்

பிரான்சின் 93 பிராந்தியத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் பொண்டி (Bondy) நகரகம் மாநகரமுதல்வருக்கான தேர்தல் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றிருந்தது இத்தேர்தலில் 61;04 வீதமான வாக்குகளை பெற்று திரு. stephan HERVE தலைமையிலான அணியினர் வெற்றிபெற்றார்கள்.

மேலும்

தமிழினத்தின் கரிநாள் சுவிசின் தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு!

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் மக்களாலும் காத்திரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும்

டென்மார்க் வாழ் தமிழர்களால் உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு பேரணி

இன்று (04.02.2022) இலங்கை சுதந்திரம் அடைந்த 74 ம் ஆண்டு நிறைவு நாளாக சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடும் அதேவேளை, ஈழத் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் வித்திட்ட கரிநாளாக உலகத் தமிழினம் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

மேலும்