யாழ்மாவட்டத்தில் வடமராட்சிகிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப்படிப்பபை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்பேகாராட்டத்தில் இணைத்துக்கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப்பயிற்சிகளை முடித்துக்கொண்டபின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச்செயற்படலானார்.
மேலும்Month: September 2021
சிறப்புற நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு
முள்ளிவாய்க்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் உறுதிப்படுத்தப்பட்ட 25 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு சுவிஸ் ஆர்கவ் மாநிலத்தில் 19.09.2021 அன்று முன்னாள் போராளி சுஜீபன் தலைமையில் நடைபெற்றது.
மேலும்கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் – பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 27(2) இன் கீழ் நாளை விசேட பிரேரணை – கஜேந்திரகுமார் எம்பி
சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பானஇராஜாங்க அமைச்சர் லெகான் ரத்வத்த அவர்கள், தனது பதவிநிலை அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த 12/09/21 அன்று மாலை 6.00 மணியளவில், நிறை போதைக்குள்ளான நிலையிலும் , அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் கொண்டுவந்து நிறுத்துமாறு பணித்திருந்தார்.
மேலும்சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.
48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது.
மேலும்ஐ.நா முன்றலில் சீரற்ற காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் திரண்ட தமிழ்மக்கள்!!
எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்.
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.
மேலும்கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு 18 நாட்களாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையினை வந்தடைந்தது.
சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவேண்டும் என்னும் வேணவாவோடு பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 19/09/2021 ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை (ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலை) வந்தடைந்தது.
மேலும்கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல்கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பல் மீதான கடற்கரும்புலித்தாக்குதல் ஒரு மீள் பார்வை.
வடமராட்சிக் கடற்பகுதியில் கடலில் வலைவீசி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மீதானதாக்குலுக்குப் பதிலடியாக கடலில் ஒருதாக்குதல் நடாத்துமாறு .தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும்பிரான்சில் ஆர்ஜொந்தையில் தியாக தீபம் அவர்களின் 4 ஆம் நாள் நினைவேந்தல்!
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் 4 ம் நாள் நிகழ்வுகள் இன்று 18.09.2021சனிக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.
மேலும்