வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையதொடங்கிவிட்டனர். இன்னும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது.
மேலும்Month: September 2021
17ம் நாளாக (18/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நாவினை அண்மிக்கின்றது. (1200Km)
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவினுடைய 4ம் நாள் தொடர் உண்ணா நோன்பின் 34ம் ஆண்டு நினைவில் நிற்கின்றோம். இன்னும் விடுதலைப் பசியோடு காத்திருக்கும் திலீபன் அண்ணா போன்ற பல மாவீரர்களின் வேணவா நிறைவேற இன்றோடு 17ம் நாளாக 18/09/2021 தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். மற்றும் வரலாற்று பூர்வீக தாயகமான தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு எனும் நிலைக்கு வாழிட நாடுகளை பலப்படுத்திக்கொண்டு சுவிசு நாட்டில் பயணிக்கின்றது. நேற்றைய தினம் Fribourg மாநகரத்தில் தமிழீழ மக்களின் எழுச்சியான வரவேற்போடு நிறைவடைந்து இன்று மீண்டும் பயணம் Lausanne மாநகரம் நோக்கி பயணிக்கின்றது.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.
மேலும்பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபத்தின் 3 ஆம் நாள் நிகழ்வுகள்!
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் 3 ம் நாள் நிகழ்வுகள் இன்று 17.09.2021 வெள்ளிக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.
மேலும்16ம் நாளாக (17/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம். (1180)
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் விடுதலை அறைகூவலை நெஞ்சிலே சுமந்து கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம்
மேலும்திலீபனுடன் மூன்றாம் நாள்…!
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது
மேலும்அர்ப்பணிப்புடன் சர்வதேசக் கடற்பரப்பில் களமாடிய போராளிகள்
இந்தோனேசியாவிலிருந்த எமது படகுகளில் ஒன்றை சர்வதேசக் கடற்பரப்பிற்க்குக் கொண்டு வந்து அங்கு நின்ற எமது கப்பலில் இருந்து தமிழீழத்திற்க்குத் தேவையான பொருட்களுடன் அலம்பிலுக்கு வருவதற்க்கான ஒரு திட்டம் கடற்புலிகளின் சர்வதேசக்கடற்பரப்பில் நின்றவர்களுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது.
மேலும்காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம்.
வெளிநாட்டு அமைச்சர் பீரஸ் அதன் கனதியை நீர்த்துப்போகச் செய்யவே எண்ணிக்கையைக் குறைக்கும் விசமத் திட்டத்தில் ஈடுபடுகிறார். இதை மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிப்பதா? கூடாது என பச்சலற் அம்மையாருக்குக் காட்டமான திறந்த மடல்
மேலும்மரண அறிவித்தல்
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா பரராஜசிங்கம் அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும்பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபத்தின் 2 ஆம் நாள் நிகழ்வுகள்!
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று 16.09.2021 வியாழக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.
மேலும்