இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.
மேலும்Month: September 2021
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் இத்தாலி வாழ் தமிழ் மக்களுடன் கரம் கோர்க்கும் பலெர்மோ மாநகராட்சி.
இன்று 24/09/2021 தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டின் 10வது நினைவு நாளை நாம் கடந்து செல்லும் இவ்வேளையில், இன்றும் விடுதலைப் பசி தீராத எம் திலீபனின் கனவும் அர்ப்பணிப்பின் நோக்கமும் நிறைவேற வேண்டும் என்றால் தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளும் தாம் வாழும் நாடுகளில் தொடர்ந்தும் எமது தாயக விடுதலைக்கும், இன அழிப்பிற்கான நீதிக்குமாகப் போராட வேண்டும். அந்த வகையில், இன்று இத்தாலியின் பலெர்மோ மாநகராட்சியும், இத்தாலி தமிழர் ஒன்றியமும் இணைந்து தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவதற்கும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கும் அரசியல் நகர்வுகளுக்குமான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கையொப்பமிட்டுள்ளனர்.
மேலும்தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் முயற்சி
ஆயர் நோயெல் இம்மானுவேல், தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார்
வடக்கு-கிழகுத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தில், தொகுதி ரீதியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை முன்னெடுக்கச் செய்யும் நோக்கில் பொது வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல், தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் இந்தப் புதிய முயற்சி ஆரம்பித்து வைக்கப்படுவதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்லெப் கேணல் சீராளன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன்அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான்.
மேலும்தியாக தீபம் திலீபனின் பத்தாம் நாள்
பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.
மேலும்சுவிஸில் தங்கப்பதக்கம்.
வென்ற தங்கச்சிறுமி.
–காவியா——-
சுவிஸ்நாட்டில் உள்ள பிரபல வங்கியான UBS நிறுவனம் நடத்திய“Ubs kids cup “விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று.வெற்றிவாகை சூடினாள். எங்கள்ஈழத்துச்சிறுமி காவியா .
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்.
அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.
மேலும்பாதுகாப்புப் படைகளுக்கு தண்டனை விலக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஐக்கியநாடுகள் சபை ஒப்புதல் வழங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்க்கிறாரா – ஜனாதிபதியின் கருத்துக்கு கஜேந்திரகுமார் எம்பி 22.09.2021 நேற்றய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது
ஐநா பொதுச் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோக் நகருக்குச் சென்றிருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்ச, கடந்த ஞாயிறன்று ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ கட்டர்ஸ்சை சந்தித்தார். அச்சந்திப்பின் அவர் வெளியிட்ட கருத்துகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுளார்.
மேலும்லொகான் ரத்வத்தையின் அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-09-2021 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் முன்வைத்த பிரேரணை / கேள்வி
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்.
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத் தொடங்கியிருந்தார்கள்.
மேலும்