இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை.
சுவிஸ் தமிழர் அரசியல் துறை, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் இளையோர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வானது 23.07.2021 அன்று பேர்ண் பிரதான தொடரூந்து நிலையத்தின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்பு ஜூலை சார்ந்தும், தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும், தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி வேற்றின மக்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.




