சுவிஸில்.முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
மேலும்Day: May 18, 2021
தமிழின அழிப்பு நினைவுநாள் நிகழ்வு.பிரித்தானியவில்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதி வேண்டி,பிரித்தானிய பிரதமர் இல்லம் இல 10 downing Street க்குமுன்பாக. இன்று (மே18) காலை 10 மணிக்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்துடன். 12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் ஆரம்பமானது.
மேலும்பிரான்சு சார்செல் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
பிரான்சில் 95 மாவட்டம் சார்செல் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 17.05.2021 திங்கட்கிழமை மாலை 18.00மணிக்கு நடைபெற்றது.
மேலும்பிரான்சு வித்றி சூ சென் நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல்!
இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் மாநகரமாகிய வித்றி சூ சென் பகுதியில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் 15.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும்பிரான்சின் பொபினிப் பிரதேசத்தில் மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று (15.05.2021) சனிக்கிழமை மே 18 கவனயீர்ப்பும் வணக்கநிகழ்வும் நடைபெற்றன.
மேலும்தாயகத்தில் பல இடங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். அஞ்சலி நிகழ்வு.
இராணுவத்தின் தடைகளை தாண்டி நந்திக்கடலில் சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளனர். யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
மேலும்யாழ்.பல்கலைக்கழகதில். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு. யாழ்.பல்கலைக் கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது
யாழ் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பேரினவாத சிங்கள இராணுவம் மற்றும் காவல்துறை சூழ்ந்து நின்று யாரையும் உள்நுளையவிடால் தடுத்து நிற்கின்ற சூழலில் ,தடைகளைத் தாண்டி உள் நுளைந்த மாணவர்களால் சுடரேற்றி தமிழின அழிப்பு மே 18 நினைவேந்தல் நினைவு கூரப்பட்டுள்ளது.
மேலும்முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி .
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும்யாழ் மாநகர சபையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தலைமையில் யாழ் மாநகர சபையில் கோவிட்-19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இன்று நடைபெற்றது.
மேலும்தீர்கமுடியாத கடன்களாய் , நெஞ்சுக்கூட்டுக்குள்,
ஆயிரம்,ஆயிரம் வலிகளை சுமந்து வந்த அந்த நாளை மறக்க முடியாமல் இதயம் கனக்குறது! சுக்குநூறாய் இதயம் நொருங்கியே போனது!அழகழகாய் இருந்த கனவுகள் கலைந்தே போனது!
மேலும்