1991ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஒஸ்காா் மணியந்தோட்டத்தில் லெப் கேணல் சாரா அவர்களின் தலைமையில் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ( இவர் மன்னாா் மாவட்டத் தளபதியான லெப் கேணல் விக்ரர் அண்ணையின் தமையனது மகனென அறிந்த சரா அண்ணை விக்ரர் அண்ணையின் சங்கேதப் பெயரானா ஒஸ்காரை இவனுக்கு வைத்தார்.அத்தோடு விக்ர் அண்ணையைப் பற்றி சில அறிவுரைகளையும் வழங்கினாா்.)
ஆகாயச்கடல்வெளிச்சமருக்கான பின்களப்பணிகளுக்கான சென்றாா். ஆகாய கடல் வெளி சமருக்குப்பின் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக உருவாக்கப்பட்டபோது அங்கு சென்று ஐப்பான் 01 இல் பயிற்சிபெற்று கடற்புலியானான். 29.08.1993 ம் ஆண்டு பருத்தித்தித்துறைக் கடற்பரப்பில் கரும்புலித்தாக்குதலில் அழிக்கப்பட்ட டோறா பீரங்கிப் படகில் கைப்பற்றப்பட்ட 20mmன் பிரதிச்சூட்டாளாராகச் செயற்பட்டு அதன் பின் சூட்டாளாராகச் திறமையாகச் செயற்ப்பட்டதால் கடற்புலிகளுக்காக முதன் முறையாக வந்த கனரக ஆயுதத்தின் பிரதான சூட்டாளராகவும் அதன் பொறுப்பாளராகவும் செயற்பட்டான் வீரச்சாவடையும் தருணத்திலும்கூட அவனது கை கனரக ஆயுதத்திலேயே இருந்தது கிளாலி தொடக்கம் திருகோணமலை வரை வீரச்சாவடையும் வரை ஐம்பத்திரன்டு சமர்களில் பங்குபற்றி தனது ஆற்றலைவெளிப்படுத்தினான்.அது மட்டமல்லாது தமிழீழத்தற்க்கு பலம் சோ்க்கும் நடவடிக்கையிலும் முன்னின்று செயற்பட்டான் .பொறுப்பாளராகபடகின் கட்டளை அதிகாாியாக பலம் சோ்க்கும் அணிகளின் பொறுப்பாளாராக லெப் கேணல் நரேஸ் படையணியின் தளபதியாக என பலவேறு கடமைகளை பொறுப்பெடுத்து போராளிகளின் திறமைகளை அறிந்து அதற்கேற்றவாறு வளர்த்தெடுத்தான்.12.01.1999 அன்று திருகோணமலையில் கொலரா நோயின் தாக்கத்தால் இருந்த தென்தமிழீழப் போராளிகளை வன்னிக்கு எடுக்கும் நடவடிக்கையினை விநியோக அணி செய்து கொண்டிருக்க அதற்க்கு பாதுகாப்புப் வழங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இடம்பெற்ற இலங்கைகடற்படையினருடனான கடும் சமரில் வீரச்சாவடைகிறான். 1999ம் ஆண்டு பிற்பகுதியில் இவனது பெயரைத் தாங்கிய கடற்சண்டைப்படகு வடிவமைக்கப்பட்டு கட்டளைப்படகாக செயற்பட்டதுடன் இவனால் வளர்த்தெடுக்கப்பட்ட போராளிகள் ஆயுதச்சூடுனராகவும் கட்டளை அதிகாரிகளாகவும் அப்படகில் செயற்பட்டனர்.
