12.01.1999 அன்று கொலராநோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தென்தமிழீழப் போராளிகளை மீட்கவேண்டிய பாரிய பொறுப்பு கடற்புலிகளிடம் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
அதற்கமைவாக ஆறு நாட்களுக்கு முன்பு தென் தமிழீழ விநியோக நடவடிக்கையின் மூலம் கடற்படையின் பலத்த தாக்குதலுக்கு மத்தியில் மருந்துப் பொருட்களையும் இறக்கிவிட்டு சிலபோராளிகளையும் அழைத்துக் கொண்டு வந்தனர்.அவ் விநியோக நடவடிக்கையில் சிலபடகுகள் சேதமேற்பட்டு அதன் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் அடுத்த நடவடிக்கையின் மூலம் கொலரா நோய்த் தாக்கத்தால் உள்ள அனைத்துப் போராளிகளையும் மீட்கும்படி தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது .அதற்கமைவாக அனைத்து வேலைகளும் மிகவும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு தலைவர் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி இவ்விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . இவ் விநியோக நடவடிக்கையின் மூலம் கொலராதாக்கத்திற்குள்ளான அனைத்துப் போராளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.இந்நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து கடற்புலிகளும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி செம்மலைப் பகுதியில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு பூரண மருத்துவச் சோதனை முடிக்கப்பட்டு அதன் பின்னர் அவர்களது முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.ஆகவே ஒவ்வொரு விடயத்திலும் மிகவும் கவனமெடுத்துச் செயற்படும் தலைவர் அவர்களின் இச்செயற்பாட்டின் மூலம் பல உயிர்கள் அன்று காப்பாற்றப்பட்டன.இச் செயற்பாடுகளில் மருத்துவப்பிரிவினரின் பங்கும் மிகவும் அளப்பரியது .பெருமளவு போராளிகளை மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு எதுவித உயிரிழப்புக்களுமின்றி காப்பாற்றி எம்தேசத்திற்க்கு பெருமை சேர்த்தார்கள்.
