பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

0 0
Read Time:6 Minute, 36 Second

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகச்சுடரினை 15.10.2008 அன்று முகமாவையில் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த நித்திலன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.

போட்டிகள் முறையே வயலின், மிருதங்கம், குரலிசை தனி, குழு என நடைபெற்ற அனைத்துப் போட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர்.

வெற்றிபெற்ற போட்டியாளர்களுடன், போட்டிகளின் நடுவர்கள், பக்கவாத்திய கலையர்களும் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்..

கடந்த 2019 ஆம் ஆண்டு 8 ஆவது இசைவேள்வியில் இசைத்துளிராகத் தெரிவு செய்யப்பட்ட செல்வி சோதிராசா சோனா அவர்களின் சிறப்பு ஆற்றுகையும் இடம்பெற்றிருந்தது.

இம்முறையும் அனைத்துப்போட்டிகளும் பக்கவாத்தியங்கள் சகிதம் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் மிகச் சிறந்த போட்டியாளர் தெரிவுசெய்யப்பட்டு ‘இசைத்துளிர்” கிண்ணம் வழங்கப்பட்டது.

2023 இசைவேள்வியின் ‘இசைத்துளிர்” ஆக செல்வி சிறிதரன் ஆரபி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

இவருக்கான மதிப்பளித்தலை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் வழங்கிவைத்திருந்தார்.

பிரான்சில் தற்போதைய அசாதாரண நிலைமைக்கு மத்தியிலும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நன்றி உரைக்கப்பட்டது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.

இசைவேள்வி 2023 போட்டி முடிவுகள்:

இசைத்துளிர் – 2023

செல்வி சிறிதரன் ஆரபி

வீணை அதிமேற்பிரிவு
1ம் இடம்: சத்தியநாதன் அமலியா

குரலிசை கீழ்ப்பிரிவு

1ம் இடம்: நாகராஜன் மந்திரா
2ம் இடம்: ஈஸ்வரதாசன் சனுஜா
3ம் இடம்: யோகலிங்கம் விபுஷா

குரலிசை மத்தியபிரிவு

1ம் இடம் : சிறிதரன் அக்சரா
2ம் இடம் : கந்தசாமி ஆதிஷா
3ம் இடம் : ஜீவராஜா ப்ரவீன்ராஜா

குரலிசை மேற்பிரிவு
1ம் இடம் : ஜீவராஜா ப்ரஸாதிரி
2ம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
3ம் இடம் : சுதன் மாயா

குரலிசை – அதிமேற்பிரிவு

1ம் இடம் : ஜீவராஜா ப்ரதியங்கிரா
2ம் இடம் : பொன்னுசாமி விக்ரம் யுவியன்
3ம் இடம் : அன்ரன் லியோன் செருபா

குரலிசை – அதிஅதிமேற்பிரிவு
1ம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி
2ம் இடம் : திலீப்குமார் திசாணிகா
3ம் இடம் : செல்வகுமார் சரணியா

வயலின் – அதிஅதிமேற்பிரிவு
1ம் இடம் : மயில்வாகானம் அபிராமி
2ம் இடம் : தே. ஆசிதன்
3ம் இடம் : சிவராஜா மதுரா

வயலின் மத்திய பிரிவு

1ம் இடம் : லிங்கேஸ்வரன் நதிஷா
2ம் இடம் : திரு அழகன் திலக்ஷா
3ம் இடம் : சிவலோகநாதன் எழனி

வுயலின் மேற்பிரிவு

1ம் இடம் : சீத்தாகாளி பூங்காவனம் கேஷவன்
2ம் இடம் : அகிலன் அ+காஷ்
3ம் இடம் : இராசையா சுருதிகா

வயலின் அதிமேற்பிரிவு
1ம் இடம் : மகிந்தன் மகிஷா
2ம் இடம் : அகிலன் அஷ்வின்
3ம் இடம் : அகிலன் ஆர்த்தி
வயலின்

கீழ்ப்பிரிவு

1ம் இடம் : பிரசன்னா சிறீஸ்
2ம் இடம் : வாகீசன் கவின்

மிருதங்கம் மத்தியபிரிவு

1ம் இடம் : ஹென்றிக்ஹரீஸ் எட்ஷியன்
2ம் இடம் : லேகோன்டார்வின் டினாத்
3ம் இடம் : ஜீவராஜா ப்ரவீன்ராஜா

மிருதங்கம் மேற்பிரிவு

1ம் இடம் : லிங்கேஸ்வரன் நலினன்

மிருதங்கம் அதிமேற்பிரிவு

1ம் இடம் : கணேசலிங்கம் துவாரகன்
2ம் இடம் : பாலன் அபிஷேக்
3ம் இடம் : கணேசலிங்கம் துளசிகன்

மிருதங்கம் அதிஅதிமேற்பிரிவு

1ம் இடம் :மயில்வாகனம் ஆதிகேசன்
2ம் இடம் : விஜயகாந் விதுஷன்
3ம் இடம் : நவரத்தினம் ராகுல்

வயலின் (குழு) கீழ்ப்பிரிவு

1ம் இடம் :நாதலயம் 1
2ம் இடம்; : நாதலயம் 2

வயலின் (குழு) மேற்பிரிவு
1ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
2ம் இடம்; : லாக்கூர்நோவ் தமிழ்ச்சோலை
3ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி

மிருதங்கம் மத்தியபிரிவு

1ம் இடம் : சப்தஸ்வரங்கள்
2ம் இடம்; : இசைக்கதம்பம் 2
3ம் இடம் : அஷ்டலட்சுமி தேவஸ்தானம்

குரலிசை (குழு) மேற்பிரிவு
1ம் இடம் : இசைக்கதம்பம்
2ம் இடம்; : அஷ்டலட்சுமி தேவஸ்தானம்
3ம் இடம் : அபிராமி நாட்டியாஞ்சலி 2

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment