முன்னேறிப்பாய்ச்சலும் புலிப்பாய்ச்சலும் இது ஒருபகுதிக்கான பதிவு.

0 0
Read Time:4 Minute, 10 Second

மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராகஇருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார்.

அதற்கமைவாக வலிகாமம் பகுதியிலுள்ள மாதகல் திருவடிநிலையில் பதினைந்துபேர் கொண்ட சிறு அணி நிலை கொள்ள வேவு அணிகள் முன்னே தமது வேவுத்தகவல்களைச் சேகரித்தன .09.07.1995 அன்று காலை எதிரி பலத்த எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களை நடாத்தியவாறு பாரியதொரு முன்னேற்ற நடவடிக்கையை திருவடிநிலை கடற்கரையோரப் பிரதேசம் நோக்கி ஆரம்பித்தான் .
அங்குநின்ற அணிகள் சிறுசிறு தாக்குதல்களை நடாத்தி பின்வாங்கின.இவ் அணிகளுடன்
மேலதிகமாக மூத்த தளபதி பானு அவர்களின் தலைமையில் மேஐர் பசிலன் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி அணிகளும்

இன்னும் பல அணிகளும் அராலியில் ஒரு அரண் அமைத்து எதிரியின் முன்னேற்றத்தை தடுத்தனர்.ஆனால் 12.07.1995 அன்று அணிகள் பின்னால் எடுக்கப்பட்டதுடன் அனைத்து அணிகளும் மருதனார்மடப் பாடசாலையில் ஒருங்கினைத்து மூத்த தளபதி பொட்டு அவர்கள் தலைமையில் ஒரு பெரும் தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதுடன்

எதிரியின் முன்னேறிப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையால் மக்கள் படுகின்ற இன்னல்களைப் பற்றி குறிப்பிட்ட மூத்த தளபதி பொட்டு அவர்கள் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை பலப்படுத்துவதற்க்கு முன் தாக்குதல் நடாத்த வேண்டுமெனவும்.அணிகள் பிரிக்கப்பட்டு அளவெட்டி பகுதிக்கு மூத்த தளபதி பானு அவர்களும் உதவியாக( 18.10.1995 அன்று சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப் கேணல் சங்கர் அவர்களும் நியமிக்கப்பட்டனர்)

.14.07.1995 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமாகிய சில நிமிடங்களில் முன்னரன்கள் கைப்பற்றப்பட்டு அணிகள் முன்னேறிச் சென்று அருணோதயாப் பாடசாலை உட்பட்ட பெரும்பிரதேசம் எமது பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்தன.அன்றைய தினம் மதியம் எமதணிகளுடன் மேலதிகமாக மட்டு.அம்பாறைப் படையணிகள் இணைக்கப்பட்டு மாசியப்பிட்டி பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு இவ் அணிகள் அனுப்ப்பட்டு அங்கு நின்ற அணிகளுடன் இணைந்து சண்டையிட்டு அவ்விடங்களும் கைப்பற்றப்பட்டன.

இவ் வெற்றிகர இராணுவ நடவடிக்கையை தலைவர் அவர்களின் ஆலோசனையுடன் மூத்த தளபதி பொட்டு அவர்கள் வழி நடாத்தினார்.இந் நடவடிக்கையில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டு
பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு ஒரு புக்காரா விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.படையினரால் வன்வளைப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது்.இந் நடவடிக்கையில் எழுபது போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

எழுத்துருவாக்கம்..சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment