விநியோகத் தொடரணி மீதான கடற்புலிகளின் தாக்குதல்

0 0
Read Time:5 Minute, 52 Second

1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின்  தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின்  மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல்.

யாழ்குடாநாடு முழுவதையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவர சிங்கள அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்திருந்தனர். அதன் பின் பாரியதொரு இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள அரசு தயாராகிக்கொண்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆளணிகளை இலங்கைக் கடற்படையினர் திருகோணமலையிலிருந்து கடல்வழிமூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு நகர்த்திக்கொண்டிருந்தனர். கடற்படையின்
இக்கடல்வழி வநியோகம் மீது தாக்குதல் நடாத்துமாறு தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குப் பணித்திருந்தார். அதற்கமைவாக கடற்படையின் கடல்நடவடிக்கைகள் துணைத்தளபதி பிருந்தன்மாஸ்ரரின் தலைமையிலான அணி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் கடற்சண்டைப் படகுகள் வடமராட்சியில் நிலைகொண்டிருந்தன. அச்சண்டைப்படகுகள் கடல்வழிமூலம் முள்ளிவாயக்கால் வந்து காத்திருந்தது. பிருந்தன்மாஸ்ரரின் தகவல்களின் பிரகாரம் கடற்படையின் விநியோகத்தொடரணி முல்லைத்தீவிலிருந்து வெற்றிலைக்கேணி வரையான பகுதிகளில் கரையிலிருந்து குறிப்பிட்டளவு உயரத்தாலும் அதன்பின் கரையிலிருந்து கூடுதலான உயரத்தாலும் செல்வது வழமையாகும். முல்லைத்தீவுப் பகுதியில் தான் தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது .
இத்தாக்குதலில் ஒரு புதிய யுக்தியும் செய்யவிருந்தனர். அதாவது கடற்படையின் கப்பலை சண்டைப் படகால் தாக்கி நிற்க கடற்புலிகளின் தளபதி கங்கைஅமரன் அவர்களிடம்  நீரடிநீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் நீருக்கடியால் சென்று கப்பலின் அடிப்பகுதியில் வெடிகுண்டுகளை பொருத்தி கப்பலை மூழ்கடிப்பார்கள். இதுவே திட்டமாக இருந்தது. இத்திட்டத்தின் அடிப்படையில் 02.10.1995 அன்று  சண்டைப்படகுகள் முறையே லெப்.கேணல் தன்ராஐ், லெப் கேணல் இளநிலா மற்றும் கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் ஆகியோர் தலைமையிலான சண்டைப் படகுகளும் கடற்கரும்புலி மேஐர் அருமை கப்டன் தணிகை ஆகியோரை உள்ளடிக்கய கரும்புலிப்படகுமாக திருகோணமலையிலிருந்து வந்து கொண்டிருந்த கடற்படையின் விநியோகத் தொடரணியை இலக்கு வைத்தபோது அவைகளுக்குப் பாதுகாப்பாக வந்த டோறாப்படகுகள் மீது  லெப் கேணல் இளநிலா  தலைமையிலான படகுகள் தாக்குதலை மேற்கொள்ள மற்றப் படகுகள்  ரணகஐ தரையிறங்கு கலம் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
லெப் கேணல் தன்ராஐ் மற்றும் பிருந்தன்மாஸ்ரரின் படகுகள் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலி மேஐர் அருமை கப்டன் தணிகை ஆகியோர் ரணகஐ தரையிறங்குக்கலம் மீது அதன் பின் பகுதியில் தங்களது கரும்புலிப்படகால் மோதி வெடித்தனர். ஆனாலும் கப்பல் தப்பியது. இந் நிலையில் திடீரென கடலில் ஏற்பட்ட காலநிலைமாற்றத்தால் நீரடி நீச்சல்பிரிவுப் போராளிகளையும் அனுப்பமுடியாமல் போனது. இருந்தாலும் கடற்சண்டை தொடர்ந்தது . ஆறு மணித்தியாலயம் நடந்த இக்கடற்சமரில் எழுபதிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். இவ்வெற்றிகர கடற்சமரை கடற்புலிகளின் முதலாவது துணைத்தளபதியும் கடற்புலிகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவருமான பிருந்தன்மாஸ்ரர் அவர்கள் கடலிலிருந்து செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இவரே இத்தாக்குதலுக்கான தகவல்களையும் புதிய யுக்திகளையும் தலைவர்  அவர்கள் மற்றும் சிறப்புத்தளபதி சூசை அவர்களுடனும் கலந்தாலோசித்து செய்திருந்தார். இவ்வெற்றிகர கடற்சமரில் இரண்டு கடற்கரும்புலிகள் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

எழுத்துருவாக்கம்…சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment