பல்வேறு களப்பணிகளில் பங்காற்றிய மாவீரன் லெப். கேணல் மாறன் / குன்றத்தேவன்

0 0
Read Time:6 Minute, 26 Second

1999ம் ஆண்டு வன்னி மீதான இலங்கைப் படையினரின் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலால் இயக்கத்தில் இணைந்தவர்களில் ஒருவன் மாறன். தனது அடிப்படை பயிற்சியை மாறன் 10ல் முடித்தவன். அப்பயிற்சி முகாமிலிருந்து ஒரு தொகைப் போராளிகள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது இங்கு வந்து கடற்புலிகளுக்கான பயிற்சியை முடித்து, மணலாற்றுக் களமுனைக்குச் சென்றான்.

அங்கு சில காலம் களமுனையில் நின்றவன். தொடர்ந்து கடற்புலிகளின் தரைத் தாக்குதலனியான சூட்டி படையணி வடமராட்சிக் கிழக்கு களமுனைக்கு அனுப்பப்பட்டபோது இவனும் அங்கு சென்று ஓயாத அலைகள் மூன்றில் பங்குபற்றி தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினான். அத்தோடு கைப்பற்றப்பட்ட இடங்களை பலப்படுத்தி ஒரு முன்னரங்க நிலை அமைப்பதில் சக போராளிகளோடு இணைந்து செயற்பட்டான். தொடர்ந்தும் அங்கே நின்றவன், தலைவர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக சூட்டி படையணியில் இருந்தவர்களிள் குறிப்பிட்டபோராளிகள் கடற்தாக்குதல் படையணிக்குள் உள்வாங்கப்பட்டபோது மாறனும் ஒருவனாக வந்தான். இங்கு வந்தவன் லெப் கேணல் தியாகன் அவர்களுடன் சண்டைப் படகின் தொலைத்தொடர்பாளனாகவும் பின்னர் படகின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டவன்.
சமாதான காலத்தில் இவனது செயற்பாட்டாலும் இவனது பழக்கவழக்கத்தை நன்கு கவனித்த தளபதி இவனை தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக விடுதலைப் புலிகளின் சகல படையணிகள் மற்றும் துறைசார் போராளிகளை உள்ளடக்கிய இளநிலை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்டபோது கடற்புலிகள் சார்பாக இவனும் சென்றான். இப் பயிற்சித் திட்டமானது இலகுரக ஆயுதங்களுக்கான பயிற்சித்திட்டமும் உள்ளடக்கப்பட்டது. அவ் இலகுரக ஆயுதப் பயிற்சியில் சிறந்து விளங்கி கடற்புலிகளுக்கு பெருமை தேடித்தந்தான் என்று கூறுவதில் மிகையாகாது . அத்துடன் இவன் பயிற்சிகள் படிப்புக்கள் விளையாட்டுக்களில் சிறந்து விளங்கி தலைவர் அவர்களிடம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றவன். சிலகாலம் தரைத் தாக்குதலணிகளுக்கும் பயிற்சியாளானாகவும் செயற்பட்டான். இதற்கிடையில் தன்னை கடற்கரும்புலிகள் அணிக்கு தன்னை இணைத்துக் கொள்ளும்படி தலைவர் அவர்களுக்கு பலமுறை கடிதமூலம் கேட்டதற்கு மாறனுடைய சகோதரன் மாவீரன் என்பதால் அவருடைய கோரிக்கை தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து இயக்கத்தின் தேவை கருதி படையப் புலனாய்வுத்துறைக்குச் சென்றவன். அங்கு இரகசிய வேலையும் இயக்கத்தின் முக்கியத்துவமிக்க பணியையும் மிகவும் செவ்வனவே பணியாற்றியவன். அப்பணி முடிந்ததும் மீண்டும் கடற்புலிகளணிக்குத் திரும்பிய மாறன், சிறப்புத் தளபதி அவர்களின் ஆலோசனைக்கமைவாக கனரக ஆயுதப் பயிற்சி ஆசிரியராகப் பயிற்சி பெற்றவன். தொடர்ந்து பல போரளிகளுக்கு கனரக ஆயுதப் பயிற்சி வழங்கினான். தொடர்ந்து கடற்புலிகளின் முதுநிலை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு கனரக ஆயுதப் பயிற்சியாளனாக சிறப்புத்தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்பட்டதுடன் ,அத்தோடு தானும் கிடைக்கும் நேரத்தில் தானும் அக்கற்கைநெறிகளில் சிறப்புத்தளபதியின் அனுமதியுடன் கற்றுக்கொண்டான். தொடர்ந்து கடற்புலிகளின் சிறப்புப் படையணியின் ஒரு அணியின் பொறுப்பாளனாகவும் வெவ்வேறு களமுனைகளில் மிகவும் சிறப்பாகப் பங்குபற்றியவன். அக் காலப்பகுதியில்
கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படைமினிமுகாம்கள் மீதான வேவு நடவடிக்கைகளிலும் திடீர்த்தாக்குதல்களிலும் செவ்வனவே பங்காற்றி அதற்கான பரிசில்களையும் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் பெற்றுக்கொண்டான். தொடர்ந்து கனரக ஆயுதத்தின் ஒரு தொகுதிக்கு பொறுப்பாளனாக முழங்காவில் களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கெதிரான மறிப்புச் சமரில் மிகவும் திறம்பட செயற்பட்டான். இப்படியாக பலபோராளிகளை கனர ஆயுதத்துறையில் பயிற்சி வழங்கிய ஒரு ஆசான் இக்கட்டான பிரதேசங்களில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய ஒருவீரன். பல்வேறு களங்களில் பல்வேறு நிலைகளில் செவ்வனவே பங்காற்றிய மாறன் . 29.09.2008 அன்று அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின்
முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரில் தீரமுடன் போராடி வீரச்சாவடைந்தான்.

லெப் கேணல்..மாறன் / குன்றத்தேவன்.
காதர்முகைதீன் நஐீம்கான்.
முல்லைத்தீவு.
வீரச்சாவு .29.09.2008

எழுத்துருவாக்கம்…சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment