நான்காவது நாளாக எழுச்சியுடன் தொடரும் ஐ.நா நோக்கிய நீதிக்கான பயணமும் நிழற்படக் காட்சிப்படுத்தலும்

0 0
Read Time:2 Minute, 9 Second

புதன்கிழமை 01/09/2021 பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையை நோக்கி பயணிக்கும் நீதிக்கான பயணம் 04/09/2021 இன்று சனிக்கிழமை காலை Belleray நகரசபை முன்றலில் 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி. Belleray ,Haudainville ,Haudiomon ,Ville-en-Woëvre ,Hennemont , Parfondrupt ,Olley ,Moineville ,Bronvaux ,Woippy ,Metz ஆகிய நகரசபை முதல்வர்கள், துணை முதல்வர்கள், முதல்வர்களின் செயலாளர்களிடம் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

அனைத்து நகரசபைகளும் நீதிக்கான பயணத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளையும் விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினார்கள். தமிழ் மக்களுக்கு எப்போதும் தங்கள் ஆதரவு இருக்கும் என்ற உறுதியையும் வழங்கினார்கள். தமிழ் மக்களுடைய நீதிக்காக சில நகரசபைகள் தங்களால் இயன்ற அளவு பணிகளை தமிழ் பண்பாட்டு வலையத்துடன் இணைந்து செயற்படுத்த தங்கள் விருப்பத்தையும் ஆர்வத்தையும் தெரிவித்திருந்தனர்.

இன்றைய நீதிக்கான பயணத்தில் Metz நகரில் வாழும் தமிழ் மக்களும் இணைந்து போராட்டத்திற்கு தங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கியிருந்தார்கள். தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்தனர். ஐ.நா நோக்கிய நீதிக்கான நான்காவது நாள் பயணம் 40வது நகரசபையான Metz நகரசபையுடன் நிறைவு பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment