ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 1983 தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்த மௌரிசியஸ் முன்னாள் பிரதமர் இன்று எம்முடன் இல்லை.

0 0
Read Time:6 Minute, 34 Second

தமிழினப்பற்றாளனாக, மொழிப்பற்றாளனாக, விடுதலைப்பற்றாளனாக வாழ்ந்து மறைந்த மதிப்புக்குரிய Sir Anerood Jugnauth. அவர்களின் இழப்பானது தமிழினத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும்.

நீண்ட பெரும் வரலாற்றைக் கொண்ட தமிழ் இனத்திற்கு உலகில் ஒரு நாடு உதயமாவதே பெருமையும், அதுவொரு உரிமையும் என்பதை தான் வாழ்நாளில் மனதில் கொண்டிருந்த ஒரு உன்னத மனிதன் மதிப்புக்குரிய Sir Anerood Jugnauth அவர்களாகும். மொறிசியசில் நாட்டில் இவர் அரசியல் அதிகாரங்களில் தான் இருந்தவேளை தமிழுக்காக உரத்த குரல்கொடுத்தவர்களின் மதிப்புக்குரிய Sir Anerood Jugnauth  ஒருவராக இருந்திருக்கின்றார்.

இலங்கைத்தீவின் குடிகளான ஈழத்தமிழ் மக்கள் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் இனக்கலவரங்களை திட்டமிட்ட ரீதியில் ஏற்படுத்தி, அவர்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டு, கோடிக்கணக்கான அவர்களின் சொத்துகள் பறிக்கப்பட்டும், நாசமாக்கப்பட்டும் வாழ்ந்த இடத்திலிருந்து துரட்டியடிக்கப்பட்டபோது அதனை பொறுக்காது அவர்களுக்காக தன் மொறிசியஸ் நாட்டில் இருந்து குரல் கொடுத்தவர்.

இலங்கைத்தீவில் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட மிகப்பெரும் தமிழினப்படுகொலையான 1983 காலத்தில் மொறிசியஸ் நாட்டின் பிரதமாராக இருந்த இவர் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான ஐ. நாடுகள் தலைமைச் செயலகத்தில் உலகவல்லரசுகளின் ஒத்துழையாமைக்கு மத்தியிலும் தமிழினத்திற்காக துணிந்து குரல் கொடுத்தவர். இலங்கைத் தீவில் தமிழ்மக்கள் சிங்கள தேசத்தால் இனப்படுகொலை செய்யபடுகின்றனர் என்பதை அறுதியாகவும் உறுதியாகவும் அரைநூற்றாண்டுக்கு முன்பாக சர்வதேசத்தில் குரல் எழுப்பியவர் Sir Anerood Jugnauth என்ற இவராகும். அத்துடன் நின்றுவிடாது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதியும் சேகரித்து வழங்கியிருந்தவர். 

உலகின் மூத்த குடிகளான தமிழ்மக்கள் மொறிசியஸ் தீவில் தமது பண்பாடு கலைகலாசாரம் என்பதை அழியாமல் பாதுகாத்ததோடு மறந்தும், மறைந்தும் போக இருந்த தாய்மொழியாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற கனவைக்கண்டவர் அதற்கான முன்னெடுப்புக்களையும் செய்தவர் இவர். மதிப்புக்குரிய  Sir Anerood Jugnauth தான் அரசபதவியிலும், பலத்தோடும் இருந்தபோதும் ‘வரலாற்றுச் சூழமைவில் தமிழர்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் தமது தேச விடுதலைக்கு உறுதியாக குரல் எழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு உலகத்தமிழர்களை அன்போடு வேண்டுகின்றேன்” என்ற தமிழீழ தேசியத்தலைவரின் கொள்கையையும், கோரிக்கையையும் மனதில் ஏற்று அதனைத் தன் மனதில் வரித்துக்கொண்டு வாழ்நாளில் பணியாற்றிய ஒரு பெருமகன் என்றே சொல்லவேண்டும்.

இன்று அவர் உயிர் மறைந்து போனாலும் அவரின் இலட்சியம், அவா, பெருவிப்பம் என்பவற்றை அவரின் வழித்தோன்றல்கள் மொறியஸ் தீவில் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர். உலகத்தமிழர்களுக்கு ஒரு தனித்தேசம் உருவாகும் வரை உணர்வுகொண்ட அத்தனை தமிழர்களும் ஓரணியில் அதற்காக உழைப்போம் அதுவே நம்பிக்கையுடன் கண்களை மூடிக்கொண்ட Sir Anerood Jugnauth இவருக்கும் பலலட்சம் உயிர்களுக்கு வாழும் தமிழ்மக்கள் செய்யும் உண்மையான கைமாறாகும்.

இவரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அனைவருடனும், மொறிசியஸ் வாழ் மக்களுடன், உலகத்தமிழ் மக்களும், பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் தமது துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment