தமிழியல் பட்டக்கல்வி நுழைவுத் தேர்வில் தோற்றிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!

0 0
Read Time:3 Minute, 9 Second

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – தமிழ் இணையக் கல்விக் கழகம் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் தோற்றிய அனைத்து மாணவர்களும் சிறப்புத் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

தேர்வில் தேர்ச்சிபெற்று, பட்டப்படிப்பை மேற்கொள்ளவிருக்கும் அனைவரும் புலம்பெயர் தேசங்களில் பிறந்து தமிழ்ச்சோலை உள்ளிட்ட தமிழ்ப்பள்ளிகளில் ஆண்டு 12 வரை தமிழ் மொழியைக் கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாறஞ்சன் டினோஜன் (யேர்மனி)-
கமலதாசன் கபிலேஷன் (ESSEN தமிழாலயம் யேர்மனி)
குலநாதன் விவேக்கா (Le Blanc Mesnil தமிழ்ச்சோலை)
பிரபாகரன் பிரியங்கா (Le Blanc Mesnil தமிழ்ச்சோலை)
கிருஸ்ணபிள்ளை துலக்சனா (Le Blanc Mesnil தமிழ்ச்சோலை)
துஸ்யந்தன் இயல்வாணி (Le Blanc Mesnil தமிழ்ச்சோலை)
தம்பிப்பிள்ளை ஜெதுர்ஷா (Le Blanc Mesnil தமிழ்ச்சோலை)
முருகதாஸ் ஜதுர்ஷ்னா (La Courneuve தமிழ்ச்சோலை)
றெனோல்ட் பேர்னாட் ஜோய் எல்ரன் (Le Blanc Mesnil தமிழ்ச்சோலை)
மயூரன் நிருஷன் (La Courneuve தமிழ்ச்சோலை)
அமலதாஸன் பவியோலா (La Courneuve தமிழ்ச்சோலை)

ஆகியோரே தேர்ச்சிபெற்று பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களில் இருவர் யேர்மனி நாட்டில் இருந்து இந்தப்பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இளந்தலைமுறையினராவர்.
அத்துடன் மேற்படி பட்டப்படிப்பின் வரலாற்றில் முதற்தடவையாக முருகதாஸ் ஜதுர்ஷ்னா எனும் மாணவி 99 புள்ளிகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் ஐரோப்பிய மட்டத்தில் பட்ட மேற்படிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெருமளவான இளந்தலைமுறையினர் தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். (Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence (bac +3) அத்தோடு தமிழ்ச்சோலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பாடநெறியையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அண்மையில் தொடங்கியுள்ள நிலையில் ஆசிரியர்களும் பட்டப்படிப்பில் இணைந்து வருவதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment