இந்தியா இராணுவக்காலப்பகுதியில்யாழ்மாவட்டத்தில் சயனைட் குப்பிக்கு வந்த சிக்கலை தீர்த்துவைத்த தேசியத்தலைவர் அவர்கள்.

0 0
Read Time:6 Minute, 48 Second

இந்தியாஇராணுவத்துடன் போர்ஆரம்பித்து சிறிது காலத்தில் யாழ்மாவட்டத்தில்  நின்ற போராளிகள் சயனைட்குப்பியுடன் நடமாடுவது மிகப்பெரும் சிக்கலாக இருந்தது .(அதாவது யாராவது கழுத்தில் கறுப்பு நூல் கட்டியிருந்தால் இந்தியஇராணுவத்தினர் அவர்களைப் பிடித்து காட்டுமிராண்டித்தனமாகத்  தாக்குவார்கள்.)

இதனால் போராளிகளுக்கிடையில்சயனைட்குப்பியுடன் திரியும்போராளிகளை சுலபமாக இணங்காணப்படுவோம் என கருத்து நிலவி சயனைட்குப்பி அணியாமல் திரியலாம் என முடிவெடுக்கப்பட்டது.இத்தகவல் மணலாற்றுக் காட்டிலிருந்து களங்களை வழிநாடாத்திய தேசியத்தலைவர்  அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இதனால் சயனைட்குப்பி இல்லாமல் இராணுவக்கட்டுப்பாட்டுப்குதியில் போராளிகள் வேலைசெய்யும்போது  இந்தியப்படையிடம் பிடிக்கப்பட்டால் சித்திரவதையின்பால் பல இரகசியங்களைப் பெறக்கூடியதாக இருக்கும் அதனால் போராளிகளுக்கு புகலிடம் கொடுக்கும் மக்களும் ஆதராவாளர்களும்  பாதிக்கப்படுவார்கள். இதை உணர்ந்த தலைவர் அவர்கள் .அந்தநேரம் தலைவர் அவர்களின் பாதுகாப்பிற்க்குப் பொறுப்பாளராகவிருந்த பாண்டியன் அவர்களை அழைத்த தலைவர் அவர்கள்  யாழ்மாவட்டத்தில்  அக்காலப்பகுதியில்  நடைபெற்ற இச்சம்பவங்களை கூறிப்பிட்டு போராளியின் கழுத்தில் சயனைட் குப்பி இல்லாவிட்டால்  நடக்கும் விபரீதத்தைக் கூறி அங்குசென்று அணிகளை ஒருகட்டுப்பாடாக வழி நடாத்தும்படி தலைவர் அவர்களின் மனதில் உள்ளவற்றைக்கூறி யாழ்மாவட்டத்தளபதியாக பாண்டியன் அவர்களை வழியனுப்பிவைத்தார்.

தலைவர் அவர்களின் எண்ணக்கனவுகளுடன் யாழ்சென்று தனக்கான கடமைகளை பொறுப்பேற்று மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் அணிகளை செவ்வனவே  வழிநடாத்திய பாண்டியன் அவர்கள் 09.01.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகரில் இந்தியப்படையினரின் முற்றுகையின்போது தலைவனின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்த திருப்தியுடன் தன்னைத்தானே சுட்டுவீரச்சாவடைந்தார்.

(பாண்டியன் அவர்களின் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாண்டியனைப் பார்த்ததாகவு ம் நாங்களே இந்திய இராணுவத்திற்க்கு பயந்து முகச்சவரத்துடன் (தாடியுடன்) திரிவதாகவும் பாண்டியனோ முகச்சவரம்செய்து(தாடிஇல்லாமல்) திரிவதாகவும் சக மாணவனொருவனிடம் கூறினார்.

இதுதான் எங்கள் தலைவனின் வளர்ப்பு .)லெப்.கேணல் பாண்டியன் அவர்கள் வீரச்சாவடைய தலைவர் அவர்களின் பாதுகாப்பணிகளுக்குப் பொறுப்பாகவிருந்தவரும் தளபதி பாண்டியன் அவர்களின் நெருங்கிய நண்பனுமான இம்ரான் அவர்கள் தளபதி பாண்டியன் அவர்களின் இடத்திற்க்கு தான் போகப்போகிறேன் எனத் தலைவர் அவர்களிடம் கேட்க  தலைவர் அவர்கள். அதற்க்கு அனுமதியளித்து தனது பல எண்ணங்களைக் கூறி  இம்ரான் அவர்களை யாழ்மாவட்டதளபதியாக வழியனுப்பி வைத்தார்.

தலைவர் அவர்களின் கனவுகளைச் சுமந்து யாழ் சென்ற இம்ரான் அவர்கள் மிகவும் நெருக்கடியான  சூழலிம் பல இக்கட்டுக்களுக்கும் இடரகளுக்கும் மத்தியிலும் அர்ப்பணிப்புடனும்  யாழ்மாவட்டத்தில் அணிகளை செவ்வனே வழிநடாத்தினார்.

இவர் இந்தியப்படைகளுக்கெதிரான தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில்03.03.1988 அன்று உரும்பிராயில்  தேசத்துரோகியின் காட்டிக்கொடுப்பில்இவர்களை முற்றுகையிட்ட இந்தியப்படைகளுடன் இறுதிவரைபோராடி வீரச்சாவடைகிறார்.

இவர்களது நினைவாக 01.10.1992 யாழ்ப்பாணம் கட்டைக்காட்டில் சிறிலங்காபபடையின் மினிமுகாம் மற்றும் காவலரன்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரின் மூலம் சைபர் தாக்குதலணியாகவிருந்த அணி இம்ரான் பாண்டியன் படையனியாக தேசியத்தலைவர் அவர்களால் பெயர் சூட்டப்பட்டு புதிய தாக்குதற்படையணியாக உருவாக்கப்பட்டது.

இம்ரான் பாண்டியன் என்று பெரும் தளபதிகளின் பெயர்சூட்டப்பட்ட இச்சிறப்புப்படையணி பிற்காலத்தில் எதிரிக்குப் மிகவும் பாரிய சேதங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி சிங்களப்படைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது மட்டுமல்லாது பெரும்பாலான சண்டைகளின் களநிலவரத்தை விடுதலைப்புலிகளுக்குச் சாதகமாக மாற்றியமைத்ததும் இப்படையணியையே சாரும் .இப்படையணியின் முதலாவது சிறப்புத்தளபதியாக மூத்த தளபதி பிரிகேடியர்  சொர்ணம் அவர்களே விளங்கினார்என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.தளபதிகளான இம்ரான் அவர்களும் பாண்டியன் அவர்களும் தலைவர் அவர்களைப்பாதுகாத்தது போலவே இப்படையணியும் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பணியையும் மேற்கொண்டது. மட்டுமல்லாது  விடுதலைப்புலிகளின்  முன்னனிக்கனரக ஆயுதங்களையும்  கொண்ட  படையணியாக இருந்தது.


எழுத்துருவாக்கம்…சு.குணா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment