கனடியத் தமிழர் பேரவையின் அறிக்கை!மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு

0 0
Read Time:2 Minute, 37 Second

கனடியத் தமிழர் பேரவையின் அறிக்கை!மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) இலங்கை மீதான A/HRC/46/ L.1/Rev.1 தீர்மானத்தை, இன்று நிறைவேற்றியதைக் கனடியத் தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது.

இத் தீர்மானத்திற்கு ஆதரவாக, இன்று வாக்களித்த முதன்மைக் குழு நாடுகளுக்கும், இந்தத் தீர்மானத்தின் இணை ஆதரவாளர்களுக்கும், 22 நாடுகளுக்கும் கனடியத் தமிழர் பேரவை நன்றி தெரிவிக்கிறது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தக் கடுமையாக உழைத்த, ஆறு முக்கிய முதன்மைக் குழு நாடுகளில் ஒன்றான, கனடாவுக்கு சிறப்பு நன்றியைக் கூறுகிறோம்.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, அயராது வாதிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சமூகம் உட்பட அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை நன்றி தெரிவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின், இத் தீர்மானமானது, இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க, மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தில், ஒரு பிரத்தியேக அமைப்பை நிறுவுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இன்று இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. 11 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. 14 நாடுகள் இத் தீர்மான வாக்களிப்பைத் தவிர்த்துள்ளன.

அறிக்கை

பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை.

தெரியப்படுத்துவது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment