த.தே.ம.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு 2020

0 0
Read Time:2 Minute, 50 Second

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. 


இனப்படுகொலைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும். 
இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு தீர்வும் சாத்தியமில்லை. 
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரித்து வெளியிடப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தமிழ்த் தேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு வேண்டும்.
அதனை ஏற்பதற்கு சிறீலங்கா அரசு மறுத்தால் ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமெனக் கோருவோம். 
இனவழிப்பு யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கை யுத்த்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தி அதனை கட்டியெழுப்ப சர்வதேச சமூகத்தின் நிதி உதிவி வேண்டும்.

மேற்படி முக்கிய கோரிக்கைகள் உள்ளடங்கலாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் உள்ளடங்கலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. 
2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது. 
மேற்படி  பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞானம் வெளியீடு செய்யும் நிகழ்வு கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது தலைமையில் தமிழர் தேசத்தின் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது. 
தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதற் பிரதியை கட்சியின் பொதுச் செய்லாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களால் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பில் கொள்கை விளக்கவுரை ஆற்றினார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment