கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவு நாள் (24.07.2020) ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் நடைபெற்றது.

0 0
Read Time:4 Minute, 45 Second

பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படு கொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.

சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி நீதியைப் பெற்றுத் தரவும் அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரக் கோரியும் உள்ளடங்கிய மனு ஐரோப்பிய ஆலோசனை பொதுச் செயலருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுகின்ற இவ்வேளையில் மக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லாத வேளையில் காவல் துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க நாற்பது

பேர் மட்டுமே மிகவும் உணர்வுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவனயீர்ப்பு நிகழ்விற்கு தமிழீழ மக்களும்   வேற்றினமக்களின் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டுருந்தனர்   கலந்து கொண்ட  அர்மேனிய நாட்டு  பிரதி நிதி கருத்து தெரிவிக்கையில் தங்களுக்கு நடந்த இனப்படுகொலையை அனைத்துலகம் ஏற்று கொள்ள பல வருடங்கள் எடுத்தன எனவும் தமிழினம்  தொடர்ந்து குரல் எழுப்பினால் நிச்சயம் விடுதலை அடையுமெனவும் தனது பட்டறிவை வெளிப்படுத்தியிருந்தார். எறிக் எல்குபி அவர்களும்  பிரஞ்சுப்பாராளுமன்றத்திலும் எமது நிரந்தர தீர்வு பற்றி வலியுறுத்துவதாகவும், தேசத்தின் விடுதலைக்காக  மக்கள் கலந்து கொண்டதையிட்டும் பாராட்டும்தெரிவித்து நீதி கிடைக்கும் வரை மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் விடுதலைக்காக  போராட்ட்ங்கள்  நிச்சயம் வெற்றியை பெற்றுத்தருமென கருத்து தெரிவித்தார்..

இந் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் 1948 இல் இருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும்  தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையே  நீதியை பெற்றுத்தருமென  பிரான்ஸ் அரசாங்கத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும், ஐக்கிய நாடுகள் அவை இடமும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் , தமிழினப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களை காப்பற்றகோரியும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எல்லை கடந்த அரச பயங்கரவாத  நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ் மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தர்கள்.

 நிகழ்வில் தமிழினப்படுகொலையை உலக நாடுகள் கண்டுகொள்ள வைப்பதுடன்தமிழினப் படுகொலைக்கான அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான அறைகூவலும் விடப்பட்டது . 

 கவனயீர்ப்பு நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரான்ஸ் நாளிதழான DNA  செய்தியும் வெளியிட்டிருந்தது.

https://www.dna.fr/defense-guerre-conflit/2020/07/24/une-minorite-sri-lankaise-demande-la-reconnaissance-de-son-genocide

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற கோசத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment