பெருந்தொற்றுக் காரணமாக சுவிற்சர்லாந்து அரசு பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. ஒருபக்கம் பொருளாதாரத்தை தக்கவைக்கவும், மறுபக்கம் நலவாழ்வினைப் பேணவும் முனையும் சுவிற்சர்லாந்து கூட்டாச்சி அரசு மாநிலங்களின் உரிமைகளைக் காத்தபடி சுவிஸ் இறையாண்மைக்கு பாதிப்பு நேராது சீரான முடிவுகளை எட்டுவதைப் பெரும் பரீட்சையாக்கி உள்ளது 2020ம் ஆண்டு.
மேலும்Author: admin
எங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுங்கள் தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்எமது இளையவர்கள் சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல தமது இறமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே ஆயுதம் ஏந்தினார்கள்! க.வி.விக்னேஸ்வரன்
சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளையோர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அதேநாட்டில் தமது பகுதிகளின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே தமது அடையாளத்தை பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டியிருந்தது ஆதனால், அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டு 20 க்கும் அதிகமான நாடுகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்டார்கள்.என குறிப்பிட்டார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான பாராளமன்ற உறுப்பினர் நீதியலசர் க.வி.விக்னேஸ்வரன்.
மேலும்அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் இன்று 09-12-2020 சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கையளிக்கப்பட்டது.
மேலும்சுவிசில் மீண்டும் முடக்கம் வருமா? வெள்ளி பதில் தெரியும்!
இன்று 08. 12. 20 செவ்வாய் சுவிற்சர்லாந்துஅரசு தற்போதைய மகுடநுண்ணுயிர்த் தொற்றுத் தடுப்பு நடைமுறைகள் தொடர்பில் சிறப்பு ஒன்றுகூடலை நடுவன் அமைச்சர்களுடன் நடாத்தியிருந்தது. இதன் முடிவுகளை அறிவிக்கசுவிற்சர்லாந்து அரசின் இரு நடுவன் அமைச்சர்கள்ஊடகங்கள் முன்தோன்றினர். இதில் ஒருவர் சுவிஸ் அதிபரான திருமதி சிமோனெற்ரா சொமறுக்கா இன்னொருவர் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆவர்.
மேலும்வாதரவத்தையில் வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வாதரவத்தை J/280 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பல மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
யுத்தம் ஆரம்பித்தபோது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 460 ஆயிரத்துக் மேற்பட்ட மக்கள் இருந்தபோதிலும் ஆரம்பத்திலிருந்து அங்கு 70 ஆயிரம் மக்களே இருந்ததாக அரசாங்கம் கூறிவந்தன் நோக்கம் தமிழ்களை அழித்தொழிப்பதற்காகவே . பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் ஆற்றயி உரையின் முழுவிபரம் வருமாறு.
மேலும்மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள்‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.
தமிழர் தாயகத்தில் தேசப்பற்றுமிக்க கல்வியாளனாகவும், விடுதலைப்போராட்டத்திற்காகப் பல தளங்களில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவரும் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் 30.11.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி தமிழ்மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும்இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை
இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படையினர் தொடர்புபட்ட போர்க்குற்றங்கள் குறித்து பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரித்து வருவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்பிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்!
பிரான்ஸ் ஊடக மையத்தில் கடந்த 27 நவம்பர் அன்று மாவீரர்நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றன. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மேலும்