Read Time:1 Minute, 8 Second
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வாதரவத்தை J/280 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பல மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அக்காச்சி எழுச்சி கிராம மக்கள் மற்றும் வாதரவத்தை, வீரவாணி பகுதிகளை சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் .
குறித்த பிரதேசத்தில் 278 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனமான உதவும் கரங்கள் சமூக சேவை அமையம் மக்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் உலருணவுகளை வழங்கி வருகின்றது
அதே வேளை பல வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெகதீஸ்வரன் டிஷாந்த்







