1989ஆம் காலப்பகுதியில் மணலாற்றுக்காட்டிலிருந்து இந்தியஇராணுவத்திற்க்கு எதிராக போரை வழிநடாத்திக்கொண்டிருந்தார் தேசியத்தலைவர் அவர்கள்.அக்காலப்பகுதியில் தலைவர் அவர்களை பிடிப்பதற்காக இந்தியஇராணுவம் மணலாற்றுக்காட்டுப்பகுதிகளை நோக்கி பாரிய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களையும் நடாத்திக்கொண்டும் அடிக்கடி பாரிய இராணுவ முன்னேற்ற நகர்வுகளையும் மேற்கொண்டுவந்தது.
இவைகளுக்கெதிராக விடுதலைப்புலிவீரர்கள் மிகக் கடுமையாகவும் முழு அர்ப்பணிப்புடன் போரிட்டு அம்முன்னேற்ற நகர்வுகளை தலைவர் அவர்களின் ஆலோசனையின்படி முறியடித்து வந்தனர்.இந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவமும் தங்களது பங்கிற்க்கு மணலாற்றுக்காட்டிலுள்ள விடுதலைப் புலிகளுக்கு வரும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவரும் போராளிகள் மீது தாக்குதல் நாடாத்துவது மற்றும் மணலாற்றுக்காட்டுக்குள் ஊடுருவி விடுதலைப்புலிகளின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து இந்தியஇராணுவத்திற்க்கு கொடுப்பதையும் செய்துவந்தனர்.
முதலில் இலங்கைஇராணுவத்திற்க்கு ஒரு தாக்குதல் நடாத்தி இவர்களின் இடையூறை நிப்பாட்டினால் தான் இந்தியஇராணுவத்திற்கெதிரான போரைத் தொடர்ந்து நடாத்தலாம்.என தலைவர் அவர்கள் முடிவெடுத்தார்.
அதற்கமைவாக செல்வராசா மாஸ்ரரை அழைத்த தலைவர் அவர்கள் குறிப்பிட்டபோராளிகளைக்கொடுத்து மாஸ்ரர் இவர்களுக்குக் சூட்டுப்பயிற்சி கொடுத்து சூட்டுப்பயிற்சியில் கூடுதல் புள்ளிகள் எடுப்பவர்கள்தான் இச்சண்டைக்குத் தெரிவாவர்கள் எனக்குறிப்பிட்டு ஆண் பெண் போராளிகளைக் கொடுத்தார்.
சூட்டுப்பயிற்சியில் அதிகளவு புள்ளிகள் எடுத்தவர்களின் விபரங்களை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.மேஐர். செல்வராசாமாஸ்ரர்.

அதற்கமைவாக விடுதலைப்புலிகளுக்கு இடையூறு கொடுத்துக்கொண்டு வந்த இலங்கை இராணுவமுகாம்கள் தொடர்பான தகவல்களை தளபதி அன்ரன் அவர்கள் (வீரச்சாவு .ஆனந்தபுரம்.)தலைமையிலான அணிகள் செவ்வனவே வேவுநடவடிக்கையின் மூலம் பெற்றுக்கொடுத்தனர். அதன் அடிப்படையில் அதாவது மணலாறு முந்திரிகைக்குளம் இலங்கை இராணுவமுகாமிலிருந்து மணலாறு சிலோன் தியேட்டர் இலங்கைஇராணுவமுகாமிற்க்கு ரோந்து செல்லும் படையினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதல் நடாத்துவது திட்டமாகும்.இத்திட்டத்தின்படி செல்வராசா மாஸ்ரர் தலைமையிலான ஒரு அணியும்

சஞ்சிகா அவர்கள் தலைமையிலான ஒரு அணியுமாக அணிகள் தெரிவுசெய்யப்பட்டன.
அதற்கமைவாக 15.04.1989 அன்று காலை மணலாறு முந்திரிகைக்குளம இலங்கைஇராணுவமுகாமிலிருந்து மணலாறு சிலோன் தியேட்டர் முகாமிற்க்கு ரோந்து சென்றபடையினர் மீது கண்ணிவெடித்தாக்குதலை 2ம் லெப்.குணம் அவர்கள் நிழ்த்த சமநேரத்தில் இலங்கைஇராணுவம் மீது இரண்டு அணிகளும் ஒரு வெற்றிகரத் திகைப்புத்தாக்குதல நடாத்தினார்கள் பத்துநிமிடம் நடைபெற்ற இவ்வெற்றிகர அதிரடித்தாக்குதலில் பலபடையினர் கொல்லப்பட்டும் இருபதிற்க்கும் மேற்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன .

இவ்வெற்றிகரத் தாக்குதல்களை ஒருங்கிணைத்து தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் வழிநடாத்தியிருந்தார்.
இத்தாக்குதலின் பின் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகள் மீது தொந்தரவு செய்வதை நிறுத்திக்கொண்டது.
இவ்வெற்றிகரத்தாக்குதலில் வீரச்சாவடைந்தோர் விபரம் வருமாறு.
2ம் லெப் ..குணம்.
கணேசலிங்கம்ஜெயநாதன்.
கிண்ணியா திருமலை.

2ம் லெப்….கரன்.
வேலாயுதம் சசிகரன்.
சாம்பல்தீவு திருமலை.

இத்தீரமிகுதாக்குலில் பங்கேற்று பின் பல் வேறு களங்களில் வீரச்சாவடைந்ததோர் விபரம் வருமாறு.

கேணல்.சங்கர்(வீரச்சாவு.26.09.2001.)

கடற்கரும்புலி மேஐர்.காந்தருபன். (வீரச்சாவு.10.07.1990.)

லெப்.கேணல்.சுபன்.(வீரச்சாவு.25.09.1992.)

மேஐர்.வசந்.(வீரச்சாவு.21.06.1990.)

மேஐர்,சஞ்சிகா.03,11,1990

கப்டன்.அஞ்சனா.(வீரச்சாவு.13.09.1990.)

கப்டன்.டோறா.(வீரச்சாவு.22.11.1990.)

கப்டன்.அருந்ததி(வீரச்சாவு.03.11.1990.)

எழுத்துருவாக்கம்….சு.குணா.
