பிரான்சில் இடம்பெற்ற திருக்குறள் திறன் இறுதிப் போட்டி!

0 0
Read Time:1 Minute, 49 Second

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டு தோறும் நடாத்தப்படும் திருக்குறள் திறன் இறுதிப் போட்டி இன்று 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை LE BLANC MESNIL நகரின் நடைபெற்றது.
பள்ளி-திணைக்களம்-இறுதிப் போட்டி என மூன்று மட்டங்களில் நடைபெறும் இப்போட்டிகளில் பள்ளி மட்டத்தில் 1200 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு திணைக்கள மட்டப் போட்டிகளுக்கு 321 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். திணைக்கள மட்டப் போட்டிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 81 மாணவர்கள் இன்றைய இறுதி போட்டியில் பங்குகொண்டனர்.


போட்டிகளின் நடுவர்களாக எழுத்தாளர் திருமிகு பாலகணேசன் , கலாநிதி சரீஸ் , திருவாட்டி சாந்தகுமார் றயனி ஆகியோர் கடமையாற்றினர்.
இறுதிப் போட்டிகளில் பங்குகொண்ட அனைத்து மாணவர் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியத்தின் முத்தமிழ் விழாவில் மதிப்பளிக்கப்படுவர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு நினைவுப் பரிசிலும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு ஏனைய போட்டியாளர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் அன்றைய நாளில் வழங்கப்படும். எனத் தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

இதன் முடிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment