பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்

0 0
Read Time:2 Minute, 48 Second

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நெவ் பகுதியில் காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.


லாக்கூர்நெவ் தமிழ்ச்சங்கத்தால் லாக்கூர்நெவ் நகரசபையின் ஆதரவுடன் பிரான்சில் புனிதர்களை நினைவுகூரும் நாளில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை முன்னாள் லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிலையை வைப்பதற்கு முன்னின்று செயற்பட்டவருமான திரு கந்தையா தர்மதேவன் அவர்கள் ஏற்றிவைக்க,,
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உருவச்சிலைக்கு அவருடைய புதல்வி ஈகச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.. கேணல் பரிதி (ரீகன்) அவர்களின் நினைவுச் சின்னத்திற்கு பரிதி அவர்களின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்தார். தமிழ்ச்செல்வன் அவரோடு வீரகாவியமாகிய ஆறு மாவீரர்களுக்குமான படத்திற்கு லாக்கூர்நெவ் தமிழ்ச்சோலை ஆசிரியர் திருமதி கேதீஸ்வரன் கிரிஜா அவர்கள் சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து.நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள். பின்னர் அந்தோனி ரூசேல் அவர்களின் உரையைத் தொடர்ந்து லாக்கூர்நெவ் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர் திரு.அருளானந்தம் புவனேஸ்வரராசா உரையாற்றினார். தமிழ்பெண்கள் அமைப்பு பிரான்சின் துணைப் பொறுப்பாளர் செல்வி வரதராஜன் தமிழினி தற்கால அரசியல் நிலைப்பாடும் இளையோரின் செயற்பாடுகளும் பற்றி பிரெஞ்சு மொழியில் உரையாற்றினார்.

நன்றியுரையை செல்வி அபினயா வழங்கினார்.
நிறைவாக “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment