பிரித்தானியாவில் 30.08.2026அன்று நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு.

0 0
Read Time:2 Minute, 23 Second

கடந்த 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியா Hayes பகுதியில் முள்ளிவாய்க்கால் இறுதிக்களம் வரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு மகளிர் அணியினரால் நடாத்தப்பட்டது. தொடக்க நிகழ்வாக இளையோர்கள் மாவீரர்களின் திருவுருவப் படங்களைத் தாங்கி வர அதனைத் தொடர்ந்து அணிவகுப்புடன் மாவீரர்களின் பெற்றோர்உரித்துடையோர் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின் பிரித்தானியக் கொடி ஏற்றப்பட்டு, தமிழீழத்தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.


பொது மாவீரரின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட 22 மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்குஉரித்துடையோர் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். தொடர்ச்சியாக நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தை தொடர்ந்து தலைமையுரை நிகழ்த்தப்பட்டது .அதனைத் தொடர்ந்து மாவீரர்களுடன் பயணித்தவர்களால்; மாவீரர்களின் நினைவுரைகள் வாசிக்கப்பட்டது. பின் இளையோரின் சிறப்புரையினைத் தொடர்ந்துஉரித்துடையோர் மாவீரர்களின் திருவுருவப் படங்களும் தமிழீழத் தேசியக் கொடியும் கையளிக்கப்பட்டு உறுதியுரையின் பின் தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு நிறைவுற்றது. இந் நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment