பிரித்தானியாவில் 30.08.2026அன்று நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு.

கடந்த 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியா Hayes பகுதியில் முள்ளிவாய்க்கால் இறுதிக்களம் வரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு மகளிர் அணியினரால் நடாத்தப்பட்டது. தொடக்க நிகழ்வாக இளையோர்கள் மாவீரர்களின் திருவுருவப் படங்களைத் தாங்கி வர அதனைத் தொடர்ந்து அணிவகுப்புடன் மாவீரர்களின் பெற்றோர் உருத்துடையோர் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின் பிரித்தானியக் கொடி ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

மேலும்