Read Time:1 Minute, 4 Second
தமிழீழத்தின் காதலன்
பார்த்தீபன் பயணித்தான்
பாரை வெல்லும் தியாக தீபமாய்
யாருமே நினைக்கவோண்ணா
ஈகத்தின் உச்சத்தில் நின்று – தமிழ்
ஈழ நாட்டின் மலர்வுக்காக – தன்
இனிய மக்களின் விடிவுக்காக – தமிழ்
இனத்தின் சுதந்திர மீட்புக்காக – அடிமை
இருளைக் கிழித்து ஒளியேற்றிக்கொண்டே – எங்கள்
திலீபன் பயணித்தான் – டான் பிறந்த
தேசத்தின்மேற் தீராத காதல் கொண்டு – பசித்
தீயினை வயிற்றில்மூட்டி
தினம்தினம் அணுவணுவாய்
தன்னையே தான் கொன்றபடி
தளராத தைரியத்தைக் கைப்பிடித்து
தனக்குத் தானே விடைகொடுத்து ……
தமிழீழத்தின் காதலன் பயணித்தான்
