Read Time:41 Second
எண்ணித்துணிந்தனன் கருமம்
இயற்றினன் விடிவின் தவம்
தமிழ்மக்கள் வாழ்வு சிறக்க
தாய்மண்ணின் விடிவு பிறக்க தன்னை முழுமையாய்த்தந்திடத்துணிந்தனன் தன்உடல்உயிர் உருக்கினன்
தன்னை இறுக்கியே தன்வலிஏற்றனன்
தவமே வியக்க தவமொன்று இயற்றினன்
அகிலத்தில் யாருமிலர் பிறருக்காய் வயிறெரித்து
அணுவணுவாய் மரித்துப்போக.
எப்படித்துணிந்தனை அண்ணா நீ…
அன்றும் இன்றும் இனியும் யாருமில்லை உன்போல..
