ஈழத்து வழித்தோன்றல் செல்வி. ஹனிஷா

0 0
Read Time:7 Minute, 21 Second

புறுற்ரிக்கெனில் இருந்து சுவிற்சர்லாந்தின் இளையவர் சார்பாளராக செல்வி. ஹனிஷா சூசை, சுவிட்சர்லாந்தின் ஐ.நா. இளைஞர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூயார்க் நகரில், எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய கல்வி மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞர்களின் உரிமைகளுக்காக அவர் குரல் கொடுக்கிறார்.

ஐ.நா. இளைஞர் சார்பாளராக (பிரிதிநிதியாக)

செல்வி. ஹனிஷா சூசை, சுவிட்சர்லாந்தின் ஐ.நா. இளைஞர் பிரதிநிதியாக நியூயார்க்கில் பணியாற்றுகிறார். மாற்றுத் திறனாளி இளைஞர்களின் உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சமமாக கல்வியைப் பெறும் வாய்ப்பு குறித்து அவர் போராடுகிறார் என சுவிற்சர்லாந்து ஊடகங்கள் புழாராம் சூட்டி உள்ளன.

ஈழத் தமிழராக இவர் பெற்ற பட்டறிவு (அனுபவங்கள்) இவருடைய நிகர்மை (சம்துவம்) மற்றும் உள்ளடக்கமான சமூகத்திற்கு ஏற்பட்ட பற்றுதலுக்கு அடித்தளமாயின. என சுவிற்சர்லாந்தின் முன்னணி ஊடகம் 20.மினூற்றென் (20. Minuten) குறிப்பிட்டுள்ளது.

மாற்றுத்திறன் இளைஞர்களுக்காக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்

இவருடைய பெற்றோர் மற்றும் சமூகத்தின் தொண்டுபணிகள் ஹனிஷாவை சிறுவயதிலேயே ஊக்கப்படுத்தின. இதன் விளைவாக, ஈழத்தில் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்குச் கொடை திரட்டுதல், ஏதிலிகளுக்கான குழந்தைகளுக்கு நத்தார் பரிசுகள் வழங்குதல் போன்ற பொதுப்பணிகளில் இளவயதில் தொண்டாற்ற ஈடுபட்டார் எனவும் சுவிஸ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஹனிஷா கூறுகிறார்:

“நான் மாற்றத்தை உருவாக்க விரும்புகிறேன் — குறிப்பாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் மிக நெருக்கமான சூழலில் வாழும் இளைஞர்களுக்காக.” ஈழ வழித்த்தோன்றல் ஹனிசாவின் நோக்கத்தை இவ்வாறு கோடிட்டுக்காட்டியுள்ளார்: நிகர் (சம) வாய்ப்பு, உள்ளடக்கமான கல்வி, மாந்தர் அன்பு (மனிதநேயமான) இடம்பெயர்வு, மற்றும் மனித உரிமைகள்.

நியூயார்க்கில் பணியில்

ஒட்டுமொத்த சுவிற்சார்லாந்தில் இளையவர் சார்பாளராக இவர் எழுந்தமானமாக தெரிவுசெய்யப்பட்வில்லை. ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்ற தேர்வின் பின், இரு கூட்டுப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கான பதவிக்கு மிகுந்து ஆயப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவியை பெறும் முதல் ஈழத்து தமிழ்ப்பெண் என்பதில் பெருமை கொண்டிருக்கிறார். ஈழத் தமிழ்ச் சமூகமும் பெருமை கொள்ளத்தக்க நல்வேளை இதுவாகும்.

மாநாட்டில் உரை

ஹனிஷா அவர்களது முதல் பெரிய பொது நடவடிக்கையானது, ஐ.நா.வில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மாநாடு ஆகும். இதற்கு முன்னர் இவ்வாறு சுவிற்சர்லாந்து சார்பில் இளைஞர் பிரதிநிதியும் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை. நியூயார்க்கில், றுழசடன ளுழஉயைட ளுரஅஅவை மற்றும் பெண்கள் உரிமைகள் ஆணையத்தின் விவாதங்களை கவனித்தார்.

பின்னர் ஊழுளுP மாநாட்டிலும் பங்கேற்றார் – இதில் பல பக்க நிகழ்ச்சிகள், உரையாடல்கள், பாதுகாப்பு மன்றக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். ஒரு முக்கியக் கட்டமாக, சுவிட்சர்லாந்தின் சார்பில் யுசவகைiஉயைட ஐவெநடடபைநnஉந மற்றும் உள்ளடக்கம் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றினார்.
ஹனிஷா வலியுறுத்தியது:

கல்வி தொடக்கத்திலிருந்தே எல்லோருக்கும் கிடைக்கும் வளமாக இருத்தல்வேண்டும், மனித உரிமைகள் அடிப்படையிலானதாகவும் கல்வி இருக்க வேண்டும். என வலியுறுத்தி உள்ளார்.

அதிகார பதவி இல்லாமலும்கூட அரசியல் ஈடுபாடு

பன்னாட்டு மேடையைத் தவிர, ஹனிஷா உள்ளூர் மற்றும் சமூக நிலைகளிலும் தீவிரமாக செயல்படுகிறார். பள்ளிகளில் போதனை நடத்துகிறார், வேலைமுறைப் பட்டறைகள் நடத்துகிறார், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தொண்டு நிறுவனங்களிலும் செயல்படுகிறார் – உதாரணமாக, இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களின் உரிமைகளை காக்கும் “பெர்ல்” என்ற „Grassroots“ அமைப்பிலும் பணி ஆற்றுகின்றார்.

மேலும் இவர் கருத்து தெரிவிக்கையில்: அரசியல் என்பது ஒரு பதவியில் இருக்கவேண்டும் என்பதல்ல. அது ஒரு மாற்றத்தை உருவாக்கும் இடத்தில் செயல்படுவதாக இருக்கவேண்டும் என உறுதியாக தெரிவித்துள்ளார். ஹனிஷா கல்வி, இடம்பெயர்வு கொள்கைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் மாற்றத்தை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ள இடங்களில் பணியாற்ற விரும்புவதாக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கொடும் யுத்தம், இனவாதம் ஈழத்தமிழர்களை விசையுறு பந்தாக உலகில் உந்தித் தள்ளி இருந்தாலும், புலம் விட்டு வேர் விட்ட தமிழர்களின் வழித்தோன்றல்கள் நாளை உலக அரசியல் மற்றும் சமூகத்தில் முடிவெடுக்கும் நிலைகளில் கோலாச்சும்போது, தமிழர்களின்
எதிர்காலத்தை தீர்மானிக்கும் நல்வலுக்கொண்ட செயலின் விசையாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை விண்மீனில் ஒருவராக ஹனிஷாவும் ஒளிர்கின்றார்.

தொகுப்பு: சிவமகிழி

https://www.instagram.com/p/DK-G6ehM9mJ/

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment