தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்

ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தக் குயில்…?

மேலும்

தாயகமே தலைவணங்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு-2026

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிப் போரில் தீரமுடன் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டு, போர்ச்சூழல் காரணமாக மாவீரர்களாக அடையாளப்படுத்தப்படாத மேலும் 20 மாவீரர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீரவணக்க நிகழ்வும், நடுகல் விதைப்பும் 20/09/2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் மாவீரர் நினைவாலயத்தில்மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.

மேலும்

பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026  பங்களிப்பு அட்டை வழங்கல்

பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 பங்களிப்பு அட்டை உத்தியோகபூர்வமாக நேற்று 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்

திலீபனுடன் ஏழாம் நாள் இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று “இந்தியா ருடே” (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்.

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.

மேலும்

தியாக தீபம் திலீபனுடன் ஐந்தாம் நாள்

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து “திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்” என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”

மேலும்