தாயகமே தலைவணங்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு-2026

0 0
Read Time:7 Minute, 2 Second

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிப் போரில் தீரமுடன் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டு, போர்ச்சூழல் காரணமாக மாவீரர்களாக அடையாளப்படுத்தப்படாத மேலும் 20 மாவீரர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீரவணக்க நிகழ்வும், நடுகல் விதைப்பும் 20/09/2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் மாவீரர் நினைவாலயத்தில்
மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழீழ மாவீரர் பணிமனையினால் உறுதி செய்யப்பட்ட 20 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வினை, மாவீரர் பணிமனை ஐக்கிய இராச்சியத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பண்ணிசை வாத்தியம் முழங்க மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மற்றும் அந்த மாவீரர்களுக்குரிய தேசியக் கொடிப் பேழைகள் உறவுகளால் மாவீரர் மண்டபத்தை நோக்கி மிகவும் உணர்வு பூர்வமாகத் தாங்கிவரப்பட்டது.

மண்டபத்தின் முன்றலின் ஆரம்ப நிகழ்விடத்தில், பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. கொடிப் பாடல் முடிவில், தமிழீழத் தாயகமே தலைவணங்கும் வீரவணக்க அடையாளமாக தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

ஆரம்ப நிகழ்வினைத் தொடர்ந்து இருபது மாவீரர்கடைய திருவுருவப் படங்களும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரதான மேடையின் படத்தாங்கிகளில் வரிசையாக வைக்கப்பட்டது.

தொடர்ந்து பொது மாவீரருக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறும் வீரவணக்க நிகழ்வுகள் தொடர்பாகவும், அதன் முக்கியத்துவம் தொடர்பாகவும், மேலும் மாவீரர்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றார்கள் என்பது தொடர்பாகவும் தமிழீழ மாவீரர் பணிமனையினரால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

இந்த வீரவணக்க நிகழ்வில்…

01 வீரவேங்கை மாவீரர் இன்பவதி

02
கடற்கரும்புலி
வீரவேங்கை மாவீரர் தமிழ்மாறன்

03
கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் யசோதா.

04
வீரவேங்கை மாவீரர் இன்பதூயோன்

05.
வீரவேங்கை மாவீரர்
நிலவரசன்

06.
கடற்கரும்புலி
வீரவேங்கை மாவீரர் அனுசியாதேவி

07.
வீரவேங்கை மாவீரர் தமிழேந்தி

08.
வீரவேங்கை மாவீரர் சுடரொளி

09.
வீரவேங்கை மாவீரர் செந்தளிர்

10.
வீரவேங்கை மாவீரர் குயிலினி

11.
வீரவேங்கை மாவீரர் அறிவு

12.
வீரவேங்கை மாவீரர் புரட்சிகரன்

13.
கடற்கரும்புலி
வீரவேங்கை மாவீரர் வரதன்

14.
கடற்கரும்புலி
வீரவேங்கை மாவீரர் நிலா

15.
கடற்கரும்புலி
வீரவேங்கை மாவீரர் நாதினி

16.
வீரவேங்கை மாவீரர்
சின்னக்கண்ணன்

17.
வீரவேங்கை மாவீரர்
ஈழத்தென்றல்

18.
வீரவேங்கை மாவீரர் மேகலா

19.
வீரவேங்கை மாவீரர் ஜெரி/பாண்டியன்

20.
வீரவேங்கை மாவீரர் நரசிம்மன்

ஆகிய 20 மாவீரர்கள் அடையாளப் படுத்தப்பட்டிருந்தார்கள். இவர்களின் ஆரம்பகால வாழ்க்கையையும், வீரம் செறிந்த போராட்ட வரலாற்றையும், தியாகத்தின் உச்சமாக அமைந்த வீரச்சாவின் இறுதிக்கணத்தையும் உறவுகளும், போராளிகளும் வாசித்தளிக்க, ஒவ்வொரு வரலாற்றுச்சுவடுகளின் முடிவிலும் குறிப்பிட்ட மாவீரரின் உரித்துடையோர்கள் ஈகைச் சுடரேற்றி, மலர் மாலை அணிவித்தனர்.

இவ்வாறு 20 மாவீரர்களின் நிகழ்வினை தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட பல நூற்றுக்கணக்கான உறவுகள், சக போராளிகள் என அனைவரும் மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றினர்.

மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து, மீண்டும் 20 மாவீரர்களுடைய திருவுருவப்படங்களும், அவர்களுக்கான தேசியக்கொடிப் பேழைகளும் துயிலுமில்லம் நோக்கி அணிவகுப்பாக எடுத்துவரப்பட்டது. துயிலுமில்லப் பகுதியில் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நடுக்கற்களில் திருவுருவப் படங்களும், தேசியக்கொடிபேழைகளும் நிலைப்படுத்தப்பட்டு ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் மரியாதையும் செலுத்தப்பட்டது.

2009 மே 18க்கு முற்பட்ட காலப்பகுதியில் துயிலுமில்லத்தில் நடைபெறும் வித்துடல் விதைப்பு நிகழ்வின் அல்லது நடுகல் நாட்டும் நிகழ்வின் முடிவில் வாசிக்கப்படும் உறுதியுரையும் இங்கு வாசிக்கப்பட்டு, அனைத்து உறவுகளினாலும் உறுதியேற்பு செய்யபட்டது.

தொடர்ந்து திருவுருவப் படங்களும் தேசியக்கொடிப் பேழைகளும் உரித்துடைய உறவுகளிடம் மாவீரர் பணிமனையினரால் கையளிக்கப்பட்டது.

இறுதியாக அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த தமிழீழ தேசியக் கொடி மீண்டும் முழுக்கம்பத்துக்கு ஏற்றப்பட்டு, தேசியக்கொடி கையேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

மிகவும் உணர்வு பூர்வமாக உறவுகளின் கண்ணீருடன் நடைபெற்ற இந்நிகழ்வு, எம் இனத்தின் விடுதலைக்கு வரலாற்று ரீதியாக மாவீரர்களே! எம்மை என்றும் வழி நடத்துவார்கள் எனும் உயரிய எண்ணத்துடன் நிறைவு பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment