Read Time:1 Minute, 22 Second
திலீபனண்ணா நீ எம் தேசவிளக்கு
அணுவணுவாய் வலிகொண்டாய்
அவதியை அமைதியாய் வென்றாய்
ஆக்கிரமிப்பின்அகங்காரம்
அழித்தாய்
அகிம்சைக்கே
பெருமை அளித்தாய்
ஆருக்கு வரும் உனது நெஞ்சுரம்
நெருப்பாய் நிதமும் தகிக்கும் மனத்திடம்
எமக்காய் உன்னை எரித்தாய் அண்ணா -நெஞ்சில்
செந்தமிழீழம் வரித்தாய் அண்ணா
மக்கள் புரட்சி வெடிக்கும் சுதந்திரதமிழீழம் மலரும் என்று
நிச்சயமாக உரைத்தாய் அன்று
நீளும் நாட்களை அதற்காய்
வாழநினைக்கட்டும் தமிழினம்
இன்று
நீ செய்த ஈகம்
ஈடு இணையற்ற விடுதலையாகம்
மானத்தமிழர் ஒவ்வொருவரும் உன்னை
மனதில் வைத்துளர்
புரட்சியைப்புரட்சிப்பர்
எம் புனிதன் உன் கனவை
செயலாக்குவர்
இளையோர் எழுவர்
இனத்தின் துயர்களைவர்-உன் இலட்சியம் வெல்வர் -தமிழ்
இறைமைகாப்பர்.
திலீபனண்ணா நீ எங்கள் தேசவிளக்கு..
ஒளிகொண்டு வழிகாட்டும்
ஈகவிளக்கு.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
.
கலைமகள்
26.09.2025





