Read Time:42 Second
இலட்சியவேட்கையின் ஒளித்தீபன்
விடுதலைவடம்பிடித்தபார்த்தீபன்
பாரதப்போரிலே சாரதியான பார்த்தீபன் கீதை சொன்னான்
அங்கே..
பாரதக்கொடுஞ்செயலைப்பழிக்கும் புதுக்கீதை செய்தான்
எங்கள் பார்த்தீபன்
இங்கே..
தமிழினத்தின் விடுதலைக்கு பசிகிடந்து வடம்பிடித்தான்…
தானே
திரியானான் தானே
நெய்யானான்
தானே சுடரானான்
தானே ஒளியானான்
தானே மறையாயானான்
தமிழ்போற்றும்
இறையானான்…
கலைமகள்
