Read Time:42 Second
உயிர் வேள்வியின் நாயகன்
உறுதியே ஒரு முறை
தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள
உயிர் வலி சுமந்து
உரிமைக்காய் உதிர்ந்து போக
திடம் கொண்ட திலீபன்.
உணவு நீர் உறக்கம் இவை
எதுவுமே – அவன்
உண்மையான விடுதலைப்பற்றின்முன்
ஒன்றுமில்லாது பற்றற்றுப்போக
எமக்காக உருகி உருகி
அணைந்து விடத் துணிந்துவிட்டான்
தமிழீழத்தைத் தாரக மந்திரமாய்
தன் மனதில் மனனித்துக் கொண்டே
உயிர் வேள்வி செய்ய
உறுதி பூண்ட நாயகன்……
