தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிற்சர்லாந்துபத்திரிகைச் செய்தி 01.12.2024

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 01.12 .2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது 12 மணியளவில் வரவேற்புச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. திரு திருமதி ஐவரி கரோலின் ஆகியோர் வரவேற்புச் சுடரை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பொதுச் சுடரினை அருட்தந்தை திரு ரெஜினோல்ட் அடிகளார் ஏற்றி வைத்தார் தமிழீழத் தேசியக் கொடியினை கேணல் சேரலாதனின் துணைவியார் திருமதி அமலா அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாவீரர் பொதுத் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினை தாயகத்தின் மூத்த ஒலிப்பதிவாளர் திரு கிருபா அவர்கள் ஏற்றி வைத்தார்.

மேலும்

பிரான்சில் சார்சல் நகரில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

பிரான்சு பரிசின் புறநகர் பகுதியான சார்சல் நகரில் மாவீரர் நாள் 2024 நிகழ்வு லெப்.சங்கர் நினைவுத்தூபி முன்பாக சார்சல் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாகவும் , எழுச்சியாகவும் நடைபெற்றது.

மேலும்

பிரான்சு நெவர் நகரில் எழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர அவாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 புதனன்று பிரான்சின் புறநக‌ர் பகுதியான நெவர் நகரத்தில் மிகுந்த உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.

மேலும்

பிரான்சு கிறித்தல் தமிழ்ச்சோலையில் “மேதகு 70” அகவை நாள் கொண்டாட்டம்!

பிரான்சு கிறித்தல் தமிழ்ச்சோலையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70ஆவது அகவை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும், நடைபெற்ற  தமிழீழத்  தேசிய  மாவீரர் நாள் 2024

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

பிரான்சில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளில் இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

பிரான்சில் மாவீரர் நாள் 2024 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு முன்பாக இடம்பெற்றன.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் கல்லறைகளுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டது.

மேலும்

பிரான்சில் சிறப்பாக உணர்வெழுச்சியோடு இடம்பெற்று முடிந்த மாவீரர் நாள் – 2024 நிகழ்வு!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2024 புதன்கிழமை 91 மாவட்டத்தின் Villebon-sur-Yvette பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும்

சுவிசில் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 70!

வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த்;தேசியத்தின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை எழுபது தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துகளையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

மேலும்

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு 2024.

27.11.2024 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும்