பிரான்சில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளில் இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

0 0
Read Time:1 Minute, 32 Second

பிரான்சில் மாவீரர் நாள் 2024 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு முன்பாக இடம்பெற்றன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் கல்லறைகளுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டது.

கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான பொதுச்சுடரை ஒள்னேசுபுவா தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.விஸ்வநாதன் LLP ஏற்றிவைக்க, ஈகைச்சுடரை கப்டன் கஜன் அவர்களின் சகோதரர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.
சமநேரத்தில் கேணல் பரிதி அவர்களுக்கான ஈகைச்சுடரை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்ததையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment