சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம்,தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன்உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

0 0
Read Time:1 Minute, 29 Second

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 14.12.2024 சனி அன்று வோ மாநிலத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், ஈகச்சுடர்கள் ஏற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து சுடர் வணக்கமும் மலர்; வணக்கமும் செலுத்தப்பட்டது.

மாவீரவித்துகளான அரசியல் பெருந்தகைகள் நினைவு சுமந்த இவ்வணக்க நிகழ்வில் எழுச்சி வணக்கப்;பாடல்களுடன், எழுச்சிநடனம், கவிவணக்கம், பேச்சுகளுடன் சிறப்புரையும் இடம்பெற்றன.

நிகழ்வின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம்…’ பாடலை அனைவரும் இணைந்து பாடி தமிழீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டதனைத் தொடர்ந்து உறுதியேற்புடன் நிகழ்வுகள்; நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment