அகம் நிறைந்த அண்ணனுக்குஅகவை எழுபது வாழ்த்துகள்

1 0
Read Time:1 Minute, 41 Second

உள்ளத்தின்உரம் உரக்க
ஓர்மத்தை வரவழைக்க
எண்ணிய நற்செயல்சிறக்க
அண்ணனே மந்திரமாவான்

கண்ணியம் காவல்தாங்க
புண்ணியம் பொலிந்து தேங்க
பெண்ணினத்தின்
பெருமை ஓங்க
வண்ணங்கள் வாழ்வில்தங்க
அண்ணனே தந்திரம் சொன்னான்

தெள்ளிய அறிவுடையோன்
தெவிட்டாத அன்புடையோன்
வெள்ளமாய் வீரம்கொண்டோன்
விரிந்தவான் பார்வைகொண்டோன்
அரியவன் ஆசையற்றோன்
பெரியவன் பேறாய் வந்தோன்
உரிமையாய்த் தமிழை வளர்த்தோன்
உயிரது தமிழீழம் என்றோன்
உடல் பொருள்
அனைத்தும் ஈந்தோன்
உன்னதன் உண்மை மனிதன்
அவனியில் உயர்ந்தோன் அண்ணன்
தமிழரின் தலைவன் இறைவன்

வலியைத்தாங்கும் வலிமை தந்தோன்
வாழ்வை ஆக்கும் வழிகள் வரித்தோன்
கலிகள் களையும் கதியாய்த்தெரிந்தோன்
செயல்கள் வழியே ஒளியைப்பரப்பினன்
மனதில் உறுதி
மாண்பை நிரப்பினன்-தமிழ்
மண்ணின்விடுதலைப்பற்றை
விதைத்தனன்
நல்லன,வல்லன எல்லாம் தந்தனன்
குவலயம் வியக்கத்
தலைநிமிரச்செய்தனன்
ஆற்றல்நிறைகலைகளால் மாற்றம் நிகழ்த்த வைத்தனன்
வேள்வியன் எமை
ஆள்பவன்
எங்கள் வாழ்வவன்

அகம் நிறைந்த அண்ணனுக்கு
அகவை எழுபது வாழ்த்துகளை
அகம் கனிந்து அள்ளிச்சொரிகிறேன்.

கலைமகள்
26.11.2024

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment