பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் திருநாள் – 2023 பொங்கல் விழா!

பிரான்சில் உள்ள தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சென்தனி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கடந்த 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடியது.பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது.

மேலும்

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம்
படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்
நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023!

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 30ஆவது நினைவினை முன்னிட்டு 26வது தடவையாக இளையோர், பெண்கள், வளர்ந்தோர் பிரிவுகளுக்கான உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது கடந்த 08.01.2023 ஞாயிறு மற்றும் 14.01.2023 சனி ஆகிய இரு நாட்களும் சூரிச், பேர்ண் மாநிலங்களில் அமைந்துள்ள உள்ளரங்க மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

ஞானலிங்கேச்சுரத்தில் சுறவத்திங்கள் பொங்கல்விழா

15.01.2023 பேர்ன் நகரில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் தெய்வத் தமிழில் செந்தமிழ் திருமறை வழிபாட்டுடன் சுறவத்திங்கள் பொங்கல்விழாவும் – திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பும் மிகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

மேலும்

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மேலும்

தைப்பொங்கல் தமிழர்களின் புத்தாண்டாய் இருப்பதும் சிறப்பானதே!

பொங்குக தமிழ் புத்தாண்டில்…! இயற்கை என்னும் வியப்பின் விரிப்பில் உயிர்களின் உருவாக்கமும் வளர்ச்சியுமே வரலாறாய் நீள்கிறது. வரலாற்றின் திருப்பமாய் நிகழ்ந்ததே மொழியின் தோற்றமும் அதன் நீட்சியும். உலகின் முதன் மொழியாய் அறிஞர்கள் அறிவித்த தமிழ் மொழியினை நாவில் தவழவிடும் நாம் வரலாற்றில் பெருமைக்குரியவர்களே.

மேலும்

நெருப்போடு விளையாடாதீர்கள்! காசி ஆனந்தன் எச்சரிக்கை !

தமிழீழத்தில் இயங்கும் முதன்மை வாய்ந்த சமய நிறுவனங்களும் தமிழ்மாணவர் அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்டோர் இயக் கங்களும் ஈழத் தமிழர் சிக்கலுக்கான தீர்வு குறித்து அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையை அமெரிக்காவில் இயங்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரித்திருக்கின்றன. இக்கோரிக்கையை ஈழத்தமிழர் நட்புறவு மையமும் ஆதரிக்கிறது என்பதை இவ்வறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்

சுவிற்சர்லாந்தில் திருக்கோவில்களின் ஒன்றியம்

«இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் – சுவிற்சர்லாந்து» எனும் பெயரில் சுவிற்சர்லாந்து பொதுச்சட்டம் சரத்து 60 இற்கு அமைவாக 28.05.2017 திருக்கோவில் ஒன்றியம் நிறுவப்பட்டது. இவ் ஒன்றியம் சுவிற்சர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இந்து-சைவப் பொது- மற்றும் சமூக அமைப்புக்களை ஒன்றிணைக்கும் பெரும் பணியினை ஆற்றி வருகின்றது.

மேலும்

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2023- சுவிஸ்

வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2023- சுவிஸ்

மேலும்

பிறந்திருக்கும் இவ்வாங்கிலப் புத்தாண்டு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்திற்கு வெள்ளிவிழா ஆண்டு!

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! காலப்பெருவோட்டத்தில் இன்னுமோர் கிரெகொரி ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. ஆண்டுகள் உருண்டோடினும் எமக்கான பொறுப்பும் கடமையும் என்றும் மாறாதவையே. விடுதலையை வேண்டிநிற்கும் எம்மினத்திற்கு தமிழ்மொழியே சிறந்த பேராயுதமாகும். எம்மிளந்தலைமுறைக்கு இனத்தின் வரலாற்றையும் வேட்கையையும் தாய் மொழியிலேயே எடுத்தியம்புவது பொருத்தமானதும் கூட. எனவே, நீண்டு நிலைத்து நிற்க வேண்டிய தமிழ்மொழிக்காக எமது சேவையும் உழைப்பும் இனிவரும் ஆண்டுகளிலும் தொடரப்படவேண்டியது காலத்தின் பெருவிருப்பாகும்.

மேலும்