இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிடுகின்றது

0 0
Read Time:1 Minute, 53 Second

இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சேனல் 4 தயாராகி வருகிறது.

அதன்படி, இது செப்டம்பர் ஐந்தாம் திகதி பிரித்தானிய நேரப்படி 11.05 மணிக்கு இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்படும். முன்னதாக இந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திகதி ஒத்திவைக்கப்பட்டது.

“Sri Lanka’s Easter Bombings – Dispatches” என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (டிஎம்விபி) தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையானின்) ஊடகச் செயலாளராக இருந்த ஆசாத் மௌலானாவின் பல தீவிரமான வெளிப்பாடுகள் இந்த ஆவணப்படத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பிலும் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உட்பட பல அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக இந்த ஆவணப்படத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment