நெருப்பையள்ளித் தின்றவர் நாம், நாமார்க்கும் குடியல்லோம்….

0 0
Read Time:1 Minute, 11 Second

பரட்டைத் தலைகளோடு
பதுங்கு குழிக்குள்
பட்டினியாய்க் கிடந்த நாட்கள்…
சிரட்டையேந்திக் கஞ்சி உண்டு
சிந்தை கலங்கி நின்ற நாட்கள்…

விரட்டி விரட்டி ஓடவைத்த
சாவதற்குள் வாழ்ந்துகொண்டு…
மிரட்டி வந்த எறிகணைக்குள்
மீட்சியின்றிக் குளித்த நாட்கள்..

ஆயினும்,

வரட்டும்பகை பார்ப்போம் ஒருகை என்ற
வீரபுருசர்களைக் கண்ட நாட்களவை…
திரட்டிப் படைகொண்டு திடமாய் நின்ற தலைவன் ஒருவன் பின்னால்
தலை நிமிர்ந்து நின்ற நாட்களவை…!

தரட்டும் தருவதையெனப் பணியாது,
தார்மீக உரிமையதை வேண்டி நின்று,
இரட்டை வாய்க்கால் வரையில் நின்று
இருட்டும்வரை போராடிய நாட்களவை!

ஆதலால், நாமார்க்கும் குடியல்லோம்
நெருப்பையள்ளித்தின்றவர் நாம்,
நமனுக்கும் அஞ்சிடோம்…!
-காந்தள்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment