தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 12 ஆவது ஆண்டாக வன்னிமயில் – 2023 தேச விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி முதல் நாள் நிகழ்வுகள் கடந்த 25 ஆம் (சனி), 26 ஆம் (ஞாயிறு), மற்றும் 27 ஆம் (திங்கள்) நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமெனில் பகுதியில் மிகவும் சிறப்பெழுச்சியாக இடம்பெற்றன. மூன்று நாட்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு மாவீரர் குடும்பத்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
மேலும்Month: March 2023
13 நாளாக (01/03/2023) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது.
கடந்த 17/02/2023 பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தின் முன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் சந்திப்புக்களை மேற்கொண்டு எமது கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது. சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ தனி அரசே நிரந்தர தீர்வு என்பதனையும் கோரிக்கைகளாக முன்னிறுத்தியவாறு தொடருகின்ற இப்போராட்டம் பிரித்தானியா, நெதர்லாந்து,பெல்சியம், லக்சாம்பூர்க் , யேர்மனி , பிரான்சு ஆகிய நாடுகளில் பல முக்கிய அரசியற் சந்திப்புக்களை நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும்விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது!
விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்