பிரானதமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்கள் பதிவும்,வரவேற்பு நிகழ்வும் !

நேற்று (19/03/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.30 மணிக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் சிறப்பாகஇடம்பெற்றது.

மேலும்

சீன-ரஷ்ய- அரபுலக உறவில்
இந்தியாவின் நிலை என்ன?.

சிரிய அதிபர் பசீர் அல் அசாத் ஐக்கிய அரபுக் குடியரசிற்கு (அபுதாபி) போகிறார். அரபுலகத்தில் சிரியா மீண்டும் இணைய வேண்டுமென்கிற சகோதரத்துவ வேண்டுகோளினை விடுக்கிறது ஐ.அ.கு.

மேலும்

கிளிநொச்சியில் ஆய்வில் ஈடுபடும் சிங்களவர்கள்; மக்களிடம் வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வேண்டும் கும்பல்.!

காலிமுகத்திடலில் கடலை தரையாக்குகியும், பூநகரியில் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டுகின்றார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும்

தாயகத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்த நாள் இன்று..!

​தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா.

மேலும்

கேணல் இளங்கீரன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கேணல் இளங்கீரன் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் வன்னியில் நடைபெற்ற சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார்.

மேலும்

இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம்

ஈழநாதம் மக்கள் நாளிதழ் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஈழநாதம் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாளாந்த பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்துகொண்டிருந்த இப்பத்திரிகை இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான முக்கிய செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த துன்பங்களையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய பத்திரிகைகளில் வடக்கின் முன்னணி நாளிதழாக இருந்தது.1995 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தத் தை அடுத்து யாழ்ப்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி கல்வயல் பகுதியில் இயங்கிவந்தது. பின்னர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்த ஈழநாதம் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தது.

மேலும்

பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவரின் நிலையுடன் கூடிய சுற்றுவட்டத்தினை அமைக்க உதவிய அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

எமது தூய நகரம் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட அனைத்து சுற்றுவட்டங்களையும் அழகுபடுத்துவது தொடர்பில் சுற்றுவட்டாரங்கள் அனைத்துக்கும் நகர வடிவமைப்பாளர்களைக் கொண்டு திட்ட வரைபுகளை வடிவமைத்திருந்தேன்.

மேலும்

இந்தியாவின் போக்கு சீனாவுக்கு எதிராகவும் ரஷ்யாவுடன் நட்பாகவும் – ஊடகங்களின் பார்வையில்

Hindustan Times தொடக்கம் தமிழ்நாட்டில் இருக்கும் ‘தமிழ்ப்பொக்கிஷம்’ வலையொளி வரை, தற்போது நடைபெறும் போரில், ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் டொலருக்கு எதிராகவும் தமது கருத்துகளை முன்வைத்தாலும், சீனாவைச் சீண்டுவதை மட்டும் நிறுத்தவில்லை.

மேலும்

அரசியல் கைதியின் விடுதலை – குரல் அற்றவர்களின் குரல் ஊடக அறிக்கை

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான, அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ், பொதுமன்னிப்பில் விடுதலை!சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ், கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்தார் . இவருக்கு, பெப்ரவரி – 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.

மேலும்

பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை – ஆய்வு செய்யுமாறு சிறீதரன் எம்.பி கடிதம்

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேசத்தின் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள வேரவில் கிராமத்தில், சிமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் சாதக, பாதகத் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுத்துமூலக் கோரிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மேலும்