Read Time:57 Second
வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன், பிள்ளையார் சிலைகளும் காணாமல் போயுள்ளதுடன் சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இன்று(26) காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் சென்ற போதே குறித்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.









