Read Time:1 Minute, 1 Second
திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது
நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்கப்பெறாமையினால் முன்னர் உறுதியளித்தப்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று ஆணைக்குழு உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை என இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.