துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0 0
Read Time:2 Minute, 26 Second

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி – சிரியா எல்லையில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவானது. அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்.. பொதுமக்களால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. அன்று மட்டும் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது

தன் பின்னரும் கூட பல நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டன. இதன் காரணமாக அங்குப் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பலரும் ஈடுபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை நிலநடுக்கம் காரணமாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் இன்னும் முடியாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இப்போது துருக்கியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் இரண்டு கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவானதாகவும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment