ஈழத் தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாலானது

இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அரசான சிறீலங்கா எனப்படும் இலங்கையானது, அரசுகளுக்கான உலக ஒழுங்கு தனக்குச் சாதகமாகயிருக்கும் போக்கையும், புவிசார் சமனமாக்கல் ஆட்டத்துக்கு ஏதுவாகத் தனக்கமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவத்தையும் ஒருசேர இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஓர் ஆளும் அரச தரப்பாகப் பெற்றிருக்கிறது. இனவழிப்புப் போரை நடாத்தியதுபோலப் பொருளாதார நெருக்கடியையும் அரசுகளுக்கான உலக ஒழுங்கையும் கேந்திரச் சமனமாக்கல் ஆட்டத்தையும் பயன்படுத்தி மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று அது முனைகிறது.

மேலும்

வடக்கு-கிழக்கு மக்கள் வழங்கிய ஏகோபித்த ஆணையை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்!

ஜனாதிபதி தான் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விட அதிகமான, மிக உறுதியான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட தமிழ் கட்சிகளை, தமது கொள்கைகளையும் மக்கள் ஆணையையும் கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான தனது இனவாத கொள்கைக்கு ஆதரவு அளிக்குமாறு, எதுவித வெட்கமோ கூச்சமோ இன்றி இந்த ஜனாதிபதி கேட்டிருக்கிறார்.

மேலும்

கப்டன் சுடர்மதி வீரவணக்க நாள்

கேப்பாப்புலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முற்றுகைச் சமரின் போது 19.01.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுடர்மதி அவர்களின் 06ம் ஆண்டு நினைவில்……….

மேலும்

பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பேரினவாதிகளின் அன்றைய அசமந்த போக்காலும், பாரததேசத்தின் ஆளுமையற்ற அரசியல் தலைமையினாலும் அமைதியும் சமாதானமும் சுமந்து சர்வதேசத்தின் நம்பிக்கையான செய்தியுடன் தன்தோழர்களுடன் தமிழீழத் தாயகம் நோக்கிச் சென்ற எம் தானைத் தலைவன் தம்பியாய் வரித்துக்கொண்ட கேணல் கிட்டு அவரின் சகதோழன் குட்டிசிறி உட்பட 10 மாவீரர்களை வங்கக்கடலில் சங்கமமாக்கிய 29 ஆண்டுகள் இன்று ஆகிவிட்ட நிலையில் உலகெங்கும் வாழும் தேசப்பற்றறுமிக்க உணர்வுள்ள தமிழர்களால் அவர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

மேலும்

சுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல் கிட்டு உட்பட
பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவெழுச்சி நாள்!

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது நினைவெழுச்சி நாளானது 16.01.2022 அன்று சுக் மாநிலத்தில் நினைவுகூரப்பட்டது.

மேலும்

பிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்” போராட்டம்!

பிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழினத்தின் கரிநாள்” போராட்டம்!

மேலும்

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல் – தமிழ்ப்புத்தாண்டு 2053

உழவுத்தொழிலுக்கும் அதனை வாய்கச் செய்யும் இயற்கைக்கும் கதிரவனுக்கும் நன்றி வணக்கம் செய்யும் முகமாக தமிழர்கள் தொண்டுதொற்று கொண்டாடி வரும் மரவுவழி விழா உலகெங்கினும் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடிவரும் வேளை, சுவிற்சர்லாந்தில் பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 14.01.2022 வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் பெருவிழாவாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும்

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திருவள்ளுவர் ஆண்டு 2053“தமிழன் மாண்புற வாழ தமிழன் வரலாறு அறிந்து தமிழராக பெருமையுடன் வாழ்வோம் “

மேலும்

12.01.2022 சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பு

12. 01. 2022 சுவிற்சர்லாந்தின் நடுவனரசு மீண்டும் கூடி மகுடநுண்ணிப் பெருந் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தமது புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் தெரிவித்தனர்.

மேலும்